Thalapathy 68: விஜய் ஃபர்ஸ்ட் லுக்... தளபதி 68 டைட்டில் ரெடி... காத்திருக்கும் டபுள் ட்ரீட்!

சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

Thalapathy 68: Thalapathy 68 Title and Vijays First Look are to be revealed soon

இதற்காக விஜய் உட்பட தளபதி 68 மொத்த படக்குழுவும் சென்னை ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளனர்.

இந்நிலையில், விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக், தளபதி 68 டைட்டில் இரண்டுமே விரைவில் வெளியாகும் என அப்டேட் கிடைத்துள்ளது.

காத்திருக்கும் தளபதி 68 டபுள் ட்ரீட்
விஜய்யின் 68வது படத்தின் ஷூட்டிங் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் விஜய்யுடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

தளபதி 68 படத்தின் கதை குறித்து இதுவரை எந்த லீடும் கிடைக்கவில்லை. சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் டைம் ட்ராவல் படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல், இது விஜய் ஸ்டைல் படம் இல்லை என்றும், அவரது கேரியரில் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், விஜய் அப்பா - மகன் என இரட்டை பாத்திரங்களில் நடிப்பது மட்டுமே உறுதியாக தெரியவந்துள்ளது.

சென்னையில் தொடங்கிய தளபதி 68 ஷூட்டிங், அதன்பின்னர் தாய்லாந்தில் நடைபெற்றது. அதன்பின்னர் மீண்டும் சென்னையில் தளபதி 68 ஷூட்டிங் நடந்து வருவதாகவும், அதில், விஜய்யுடன் அனைத்து நடிகர்களும் பங்கேற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தளபதி ஃபர்ஸ்ட் சிங்கிளை ரெடி செய்துவிட்டார் யுவன் ஷங்கர் ராஜா. அந்த வரிசையில் தற்போது தளபதி 68 டைட்டிலை படக்குழு கன்ஃபார்ம் செய்துவிட்டதாம்.

அதோடு விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வேகமாக ரெடியாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், தளபதி 68 டைட்டில் இரண்டையும் ஒரே நாளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி, இந்த இரண்டுமே டிசம்பர் 30 அல்லது 2024 ஜனவரி 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின்னர் பொங்கல் ஸ்பெஷலாக தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட விஜய் முடிவு செய்துள்ளாராம். இதனால் தளபதி 68 படத்தில் இருந்து அடுத்தடுத்து தெறி மாஸ் அப்டேட்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கின்றன. இதுகுறித்து படக்குழுவே விரைவில் அபிஸியலாக அறிவிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X