Thalapathy 68: தளபதி 68 டைட்டில் மட்டும் தான் GOAT... ஆனா விஜய் லுக் டாம் க்ரூஸ் ஸ்டைலில் இருக்குதே!

சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தளபதி 68 டைட்டில், விஜய் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நியூ இயர் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தளபதி 68 டைட்டில், விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளன.

டாம் க்ரூஸ் ஸ்டைலில் விஜய்
வாரிசு, லியோ படங்களைத் தொடர்ந்து தளபதி 68ல் நடித்து வருகிறார் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகிறது. விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடிக்கும் தளபதி 68 படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

 Thalapathy 68: Thalapathy 68s fanmade poster of Vijays look is trending

நியூ இயர் ஸ்பெஷலாக டிசம்பர் 31ம் தேதி மாலை தளபதி 68 டைட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படத்திற்கு Goat - Greatest of all Time என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக தளபதி 68 டைட்டில் பாஸ் என சொல்லப்பட்டது. ஆனால், அதற்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மறுப்புத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து தளபதி 68 டைட்டில் அப்டேட்ஸ் லீக்காகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே Goat என்ற டைட்டிலை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தும் வருகின்றனர். Goat என்றால் ஆடு என்பதால், விஜய் எப்போ ஆடாக மாறினார் என கலாய்த்து வருகின்றனர். இதனால் விஜய் ரசிகர்களும் தயவுசெய்து இந்த டைட்டில் வேண்டாம் என படக்குழுவினருக்கு சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் டைட்டில் Goat-ஆக இருந்தாலும், விஜய்யின் லுக் தாறுமாறாக இருக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.

அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது விஜய்யின் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது. அதில், ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸ்க்கு டஃப் கொடுக்கும் வகையில், செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார் விஜய். அதேபோல், சயின்ஸ் பிக்‌ஷன் பட ஹீரோ லுக்கிலும் விஜய் கெத்து காட்டுகிறார். இந்த லுக் விஜய் ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தாலும், இது ஃபேன்மேட் போஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த தளபதி 68 ஷூட்டிங் நேற்றோடு முடிந்துவிட்டதாம். இதனையடுத்து விஜய் உட்பட மொத்த படக்குழுவும் சென்னை திரும்பியதாக சொல்லப்படுகிறது. தளபதி 68 அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 3ம் தேதி தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பா, மகன் என விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் தளபதி 68, ஹாலிவுட் படமான ஜெமினி மேன் காப்பி எனவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X