Thalapathy 68: தளபதி 68ல் இணையும் தமன்... ஹீரோயின்ஸ் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
சென்னை: விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.
விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், தற்போது டோலிவுட் ராக்ஸ்டார் தமனும் தளபதி 68ல் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68ல் இணையும் தமன்: விஜய்யின் தளபதி 68 படம் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. கோலிவுட்டின் மிகப் பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக லியோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தளபதி 68 மீது இப்போதே ஹைப் காணப்படுகிறது.
ஏஜிஎஸ் தயாரிக்கும் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முதன்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ள வெங்கட் பிரபு தளபதி 68-ஐ சூப்பர் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். அஜித்துக்கு மங்காத்தா படம் மூலம் கம்பேக் கொடுத்த வெங்கட் பிரபு, அப்படியொரு சம்பவத்தை விஜய்க்கும் கிஃப்ட்டாக கொடுப்பார் எனத் தெரிகிறது.
லியோ ஷூட்டிங் முடிந்து வெளிநாடு சென்றுள்ள விஜய், விரைவில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் தளபதி 68 ஷூட்டிங் அக்டோபரில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் தமன் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே யுவன் கமிட்டாகியுள்ள நிலையில், தமன் எப்படி என ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது.
ஆனால், தளபதி 68 படத்தில் தமன் ப்ரோகிராமராக மட்டும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே யுவன், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு ப்ரோகிராமராக பணிபுரிந்துள்ள தமன், இந்தமுறை விஜய்க்காக தளபதி 68ல் இணைந்துள்ளாராம். இதனால் தளபதி 68ல் பிஜிஎம் எல்லாமே வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே இப்படத்தின் ஹீரோயின்ஸ் குறித்து வெங்கட் பிரபு அப்டேட் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் ஜிவி பிரகாஷின் அடியே திரைப்பட நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தளபதி 68 படத்தில் நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் இவர்கள் யாராவது நாயகியாக நடிக்கிறார்களா எனக் கேட்கப்பட்டது. ஆனால், கண்டிப்பாக இவர்கள் இல்லையென மறுத்துவிட்டார். அதேபோல், புதுமுக நடிகையும் கிடையாது எனக் கூறிய வெங்கட் பிரபு, விஜய்க்கு யார் ஜோடி என்பது சர்ப்ரைஸ் என தெரிவித்துள்ளார்.
மேலும், லியோ படம் வெளியான பின்னர் தான் தளபதி 68 அப்டேட் வெளியாகும், ஆனால் அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக எகிற வைக்கும் எனவும் கூறியுள்ளார். இதனால் தளபதி 68 படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











