Thalapathy 68: அனிருத்தை ஓவர்டேக் செய்த யுவன்... தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிளில் தரமான சம்பவம்!
சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தின் முதல் பாடல் குறித்து நடிகர் வைபவ் அப்டேட் கொடுத்துள்ளார். யுவன் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் தாறுமாறாக வந்துள்ளதாக விஜய் ரசிகர்களின் ஹைப்பை எகிற வைத்துள்ளார்.

தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
வாரிசு, லியோ படங்களைத் தொடர்ந்து தளபதி 68ல் பிஸியாகிவிட்டார் விஜய். தளபதி 68 படத்தின் இயக்குநராக வெங்கட் பிரபு கமிட்டான போதே அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைவதால் தளபதி 68 படத்துக்கு ஹைப் ஏற்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இவர்களுடன் மேலும் பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், மாஸ்டர் பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ் என பெரும் நட்சத்திரக் கூட்டணியே இணைந்துள்ளது. அதேபோல், பல வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் யுவன் சங்கர் ராஜா கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய கீதை படத்துக்குப் பின்னர் விஜய்யுடன் யுவன் இணைவது தளபதி 68ல் தான். இது விஜய், யுவன் என இருதரப்பு ரசிகர்களையும் அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது.
இந்நிலையில் தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து இப்படத்தில் நடித்து வரும் வைபவ் அப்டேட் கொடுத்துள்ளார். அவர் நடித்துள்ள ஆலம்பனா படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தளபதி 68 குறித்து கேட்கப்பட்டது, முக்கியமாக இந்தப் படத்தில் அனிருத் இல்லாமல் யுவன் இசையமைப்பது பற்றி கேள்வி எழுந்தது. அதற்கு அவர் செம்ம அப்டேட் கொடுத்துள்ளார்.
தளபதி 68 படத்தில் இன்னொரு யுவன் சங்கர் ராஜாவை பார்ப்பீங்க. தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிளில் வேற லெவலில் சம்பவம் செய்துள்ளார். இப்படியொரு சாங் இதுவரை கேட்டிருக்க மாட்டீங்க என கூறியுள்ளார். மேலும் நான் அந்தப் பாடலை கேட்டுவிட்டதாகவும் வைபவ் அப்டேட் கொடுத்துள்ளது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், தளபதி 68 படப்பிடிப்பு தற்போது துருக்கியில் நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் 25 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டு ஸ்பெஷலாக தளபதி 68 அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தளபதி 68 டைட்டில், விஜய் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை ஜனவரி 1ம் தேதி வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











