Thalapathy 68: இரண்டே நிமிடத்தில் வெங்கட் பிரபுவுக்கு ஓக்கே சொன்ன விஜய்... தளபதி 68 கதை இதுதானா?
சென்னை: விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவுபெற உள்ளது.
இதனால் தனது தளபதி 68 படத்தின் இயக்குநர் யார் என்பதை விஜய் அதிரடியாக முடிவு செய்துவிட்டார்.
அதன்படி, வெங்கட் பிரபு தான் விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தக் கூட்டணி இணைந்தது பற்றியும் தளபதி 68 படத்தின் கதை குறித்தும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி 68 கதை இதுதானா?
விஜய்யின் லியோ ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படம் குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்க பலரும் போட்டிப் போட தற்போது அந்த வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்கு கிடைத்துள்ளதாம்.

முன்னதாக தளபதி 68 படத்தின் இயக்குநர் லிஸ்ட்டில் அட்லீ, கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டன. ஆனால், யாரும் எதிர்பார்க்காத நிலையில் வெங்கட் பிரபு தான் தளபதி 68 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் - வெங்கட் பிரபு எப்படி திடீரென இணைந்தது என ரசிகர்களுக்கே புரியாத புதிராக இருந்தது. தற்போது அதுகுறித்தும் தளபதி 68 படத்தின் கதை பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் விஜய்யை யதார்த்தமாக சந்தித்த வெங்கட் பிரபு, அவரிடம் ஒரு ஒன்லைன் ஸ்டோரியை கூறியுள்ளார். அதில் ரொம்பவே இம்ப்ரஸான விஜய், இதன் முழு கதையையும் ரெடி பண்ண முடியுமா என வெங்கட் பிரபுவிடம் கேட்டுள்ளார். இதனால் உற்சாகமான வெங்கட் பிரபு உடனே அந்த ஒன்லைன் ஸ்டோரியின் திரைக்கதையை ரெடி செய்து வருகிறாராம். மொத்தமே இரண்டு நிமிடங்களில் தான் இந்த கதையை கூறியுள்ளார் வெங்கட் பிரபு.

வழக்கமாக ஆக்ஷன் ஜானர் படங்களில் மட்டுமே அதிகமாக நடித்து வரும் விஜய், வெங்கட் பிரபு கதைக்கு ஓக்கே சொல்ல இன்னொரு காரணமும் உள்ளதாம். இந்த கதை டைம் லூப் ஜானரில் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது. சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான மாநாடு திரைப்படமும் டைம் லூப் ஜானரில் தான் உருவானது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்தது.
டைம் லூப் படமாக இருந்தாலும் ரசிகர்களுக்கு புரியும் படி பக்காவாக அதன் திரைக்கதையை எழுதியிருந்தார் வெங்கட் பிரபு. அதேபோல், மேக்கிங், ஆக்ஷன் சீன்ஸ் என எல்லாமே மாஸ்ஸாக இருந்தது. முன்னதாக வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படமும் விஜய்யின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளது. அதனால் தான் வெங்கட் பிரபுவை நம்பி தளபதி 68 படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கே கொடுத்துவிட்டாராம் விஜய்.
இந்தப் படம் ஏஜிஎஸ் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. விஜய் - வெங்கட் பிரபு - யுவன் என முற்றிலும் புதிய கூட்டணியில் உருவாவதால் ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேநேரம், தளபதி 68 திரைப்படம் டைம் லூப் ஜானராக இல்லாமல் வேறு ஜானராக இருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











