Thalapathy 68: தளபதி 68-ல் கேமியோ ரோலில் அஜித்..? அது அவரோட ஆசை: வெங்கட் பிரபு கொடுத்த சஸ்பென்ஸ்

சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தின் அபிஸியல் அப்டேட் நேற்று வெளியானது.

விஜய்யுடன் வெங்கட் பிரபு முதன்முறையாக இணையவுள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அதேபோல், புதிய கீதை படத்திற்குப் பிறகு விஜய் - யுவன் காம்போ மீண்டும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தளபதி 68ல் அஜித் கேமியோ ரோலில் நடிப்பாரா என்ற கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதில் கொடுத்துள்ளார்.

 Thalapathy 68: Venkat Prabhu informed that Ajith will not act with Vijay in Thalapathy 68 film

தளபதி 68-ல் அஜித் கேமியோ ரோல்:லியோவில் நடித்து வரும் விஜய், அடுத்து தனது 68வது படத்தின் அப்டேட்டை நேற்று வெளியிட்டார். கடந்த சில தினங்களாகவே தளபதி 68 படம் குறித்து அன் அபிஸியலாக பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நேற்று எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு தான் இயக்குவார் என்பது உறுதியாகியுள்ளது.

அதேபோல், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதையும் விஜய்யே கன்ஃபார்ம் செய்துவிட்டார். முன்னதாக தளபதி 68 படத்தில் யுவனுக்குப் பதிலாக அனிருத் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், அதுவும் தற்போது வதந்தி தான் என தெரியவந்துள்ளது. இதனால், விஜய் - வெங்கட் பிரபு - யுவன் என செம்ம மாஸ்ஸான கூட்டணி உருவாகியுள்ளது.

 Thalapathy 68: Venkat Prabhu informed that Ajith will not act with Vijay in Thalapathy 68 film

இந்நிலையில், விஜய்யின் தளபதி 68 அப்டேட் வெளியான பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் வெங்கட் பிரபு. அப்போது அவரிடம் தளபதி 68 ஷூட்டிங் எப்போது என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, லியோ ஷூட்டிங் முடிந்ததும் தான் தளபதி 68 படத்தோட அடுத்த அப்டேட்ஸ் வரும் என கூறினார். அதுவரை எல்லாமே சஸ்பென்ஸாக தான் இருக்கும், வேறு எதுவும் சொல்லமுடியாது என்றார்.

அப்போது, விஜய் - அஜித் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தை நீங்கள் இயக்குவீர்கள் என உங்கள் அப்பா கங்கை அமரன் கூறியிருந்தார். தளபதி 68ல் விஜய்யுடன் அஜித் கேமியோ ரோலில் நடிப்பாரா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய வெங்கட் பிரபு, "தளபதி 68 படத்தில் அஜித் நடிக்கவில்லை. விஜய்யும் அஜித்தும் சேர்ந்து நடிப்பது எங்க அப்பாவோட ஆசை" என சிரித்துக்கொண்டே கூறினார். வெங்கட் பிரபுவும் இதற்கு முன்பு ஒருமுறை விஜய்-அஜித் இருவரும் சேர்ந்து நடிக்க தன்னிடம் கதை இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 Thalapathy 68: Venkat Prabhu informed that Ajith will not act with Vijay in Thalapathy 68 film

இதனிடையே, தளபதி 68 படத்தின் ரிலீஸ் தேதியையும் விஜய் கன்ஃபார்ம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாம் தளபதி 68. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், அடுத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தளபதி 68 படத்தை ரிலீஸ் செய்ய விஜய் முடிவு செய்துள்ளாராம். இதனால், குறுகிய காலத்தில் இந்தப் படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X