Thalapathy 68: ”தளபதி 68 அப்டேட் சொல்லுங்க..” வெங்கட் பிரபுவை சுற்றி வளைத்த விஜய் ரசிகர்கள்!
சென்னை: விஜய் நடித்து வரும் தளபதி 68 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை, தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் பகுதிகளில் தளபதி 68 ஷூட்டிங் நடைபெற்றது. இதனையடுத்து தளபதி 68 படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது வெளியான வீடியோ அதனை உறுதி செய்துள்ளது.
வெங்கட் பிரபுவை சுற்றி வளைத்த ரசிகர்கள்
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி வரை வசூலித்தது. இதனையடுத்து தனது 68வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யுடன் பெரிய நட்சத்திரக் கூட்டணியே இணைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா தளபதி 68 படத்திற்கு இசையமைக்கிறார்.

சென்னையில் பூஜையுடன் தொடங்கிய தளபதி 68 ஷூட்டிங், அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் மோகன், ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இதனால், பக்காவாக பிளான் செய்து ஷெட்யூலை முடிவு செய்கிறார் வெங்கட் பிரபு. கடைசியாக தளபதி 68 ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தளபதி 68 படப்பிடிப்பை இலங்கையில் தொடங்க முடிவு செய்துள்ளார் வெங்கட் பிரபு. இதற்காக முதல் ஆளாக இலங்கை சென்றுள்ளார் அவர். இலங்கையில் வெங்கட் பிரபு வீதி உலா செல்ல அவரை சுற்றி வளைத்த ரசிகர்கள், தளபதி 68 அப்டேட் கேட்கின்றனர். ஆனால், வெங்கட் பிரபு அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகும் வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில், விஜய் 2 அல்லது 3 கேரக்டர்களில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் இது வில் ஸ்மித் நடித்த 'ஜெமினி மேன்' என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தளபதி 68 ஷூட்டிங் தொடங்கும் முன்னரே, இந்தப் படத்தில் விஜய்யின் கெட்டப், லுக் இரண்டும் அமெரிக்காவில் டெஸ்ட் ஷூட் செய்யப்பட்டது.
இந்நிலையில் தளபதி 68 இலங்கை ஷெட்யூல் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், நியூ இயர் ஸ்பெஷலாக டிச. 31ம் தேதி மாலை தளபதி 68 டைட்டில் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டது. அது விஜயகாந்த் மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தளபதி 68 டைட்டில் விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை பொங்கலுக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











