Thalapathy 68: சிம்பு வழியில் விஜய்... தளபதி 68 ஒன்லைன் இதுதானா..? வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்

சென்னை: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

Thalapathy 68: Venkat Prabhu Update that Thalapathy 68 will be a time travel genre film

தளபதி 68ல் விஜய் இரட்டை பாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்டின் படி, தளபதி 68 டைம் ட்ராவல் ஜானர் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டைம் ட்ராவல் ஜானரில் தளபதி 68
விஜய்யின் லியோ கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதன்மூலம் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் விஜய்யுடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கான மேக்கப் டெஸ்ட் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது.

அதுமட்டும் இல்லாமல் விஜய் கேரியரில் தளபதி 68 தரமான படமாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனமே நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. முக்கியமாக தளபதி 68 திரைக்கதை செம்ம மாஸ் என சொல்லப்படுகிறது. சென்னையில் தொடங்கிய தளபதி 68 ஷூட்டிங், தொடர்ந்து தாய்லாந்தில் நடைபெற்றது. பின்னர் மீண்டும் சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் வெங்கட் பிரபு.

இந்நிலையில், சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. இதனை முன்னிட்டு 2 Years of Maanaadu என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. மேலும், சிம்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் தங்களது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தனர். இதுகுறித்து ட்வீட் செய்திருந்த சிம்பு, மாநாடு வெளியாகி 2 ஆண்டுகள் ஆனதில் மகிழ்ச்சி. இந்த டைம் லூப் மீண்டும் தொடராதா... மாநாடு உருவானதில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை ரீ-ட்வீட் செய்துள்ள வெங்கட் பிரபு, டைம் லூப் தொடர்கிறது என போஸ்ட் போட்டுள்ளார். இதனால், விஜய்யின் தளபதி 68 படமும் மாநாடு போல் டைம் லூப் ஜானரில் உருவாகிறதா என எதிர்பார்க்க வைத்துள்ளது. அல்லது மாநாடு இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பிருக்குமா என யோசிக்க வைத்துள்ளது. ஏற்கனவே தளபதி 68 சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தளபதி 68 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் இரண்டும் 2024 நியூ இயர் ஸ்பெஷலாக ஜனவரி 1ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனிடையே தற்போது வெங்கட் பிரபுவின் ட்வீட்டும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X