Thalapathy 68: இப்பதான் ஒரு பிளாப் கொடுத்தாரு... அவரா தளபதி 68 இயக்குநர்... விஜய்க்கு என்னாச்சு?

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னொரு இரு மாதங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படம் மீதான எதிர்பார்ப்பும் இப்போதே அதிகரித்துவிட்டது.

இந்நிலையில், தளபதி 68 படத்தின் இயக்குநர் குறித்து அடுத்தடுத்து பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 Thalapathy 68: Venkat Prabhu will direct Vijays Thalapathy 68 film

தளபதி 68 இயக்குநர் இவரா?:விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில், விஜய், அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத் ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியாகவுள்ள நிலையில், அடுத்து தளபதி 68 படத்தின் இயக்குநரை தேர்வு செய்வதில் பிஸியாகிவிட்டார் விஜய்.

முதலில் வெளியான தகவலின் படி அட்லீ தான் தளபதி 68 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதால், தளபதி 68 இயக்குநர் ரேஸில் இருந்து அட்லீ விலகிவிட்டார். இதனால், அடுத்து கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இருவரும் தளபதி விஜய்க்கு கதை கூறிவிட்டு அவரது முடிவுக்காக காத்திருந்தனர்.

இவர்களில் கோபிசந்த் மலினேனி தான் தளபதி 68 படத்தை இயக்கவுள்ளதாக கடைசிக்கட்ட தகவல்கள் தெரிவித்தன. மேலும், விஜய் - கோபிசந்த் மலினேனி இணையும் தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. அதேபோல், விஜய் ஜோடியாக க்ருத்தி ஷெட்டி நடிக்கவிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது தளபதி 68 இயக்குநர் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. வெங்கட் பிரபுவின் சென்னை 28, மங்காத்தா படங்களை பார்த்து இம்ப்ரஸ்ஸான விஜய், விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். அதேபோல், வெங்கட் பிரபுவும் விஜய்க்காக ஒரு கதை எழுதியுள்ளதாகவும், இந்தப் படம் விரைவில் உருவாகும் என நம்பிக்கைத் தெரிவித்திருந்தார்.

 Thalapathy 68: Venkat Prabhu will direct Vijays Thalapathy 68 film

விஜய் - வெங்கட் பிரபு என இருவரின் ஆசையும் தற்போது நிறைவேறவுள்ளதாகக் கூறப்படுகிறது. சிம்புவின் மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த வெங்கட் பிரபு, மன்மத லீலை, கஸ்டடி படங்கள் மூலம் மீண்டும் அதாள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறார். இப்படியொரு சூழலில் எப்படி விஜய் வெங்கட் பிரபுவை ஓக்கே செய்தார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முக்கியமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான கஸ்டடி நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. நாக சைதன்யா, க்ருத்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸிலும் மிக மோசமான தோல்வியைத் தழுவியது. அதனால், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி பற்றிய தகவல், கோலிவுட் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் தளபதி 68 பட இயக்குநர் ரேஸில் சுதா கொங்கராவும் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X