Thalapathy 68: ஹாலிவுட் ஹீரோஸ் ஸ்டைலில் ரிஸ்க் எடுக்கும் விஜய்... வேற லெவலில் தளபதி 68 மேக்கிங்!!

லாஸ் ஏஞ்சல்ஸ்: லியோவில் நடித்து முடித்துவிட்ட விஜய், அடுத்து தளபதி 68 படத்துக்காக ரெடியாகிவிட்டார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

அதற்கு முன்னதாக அமெரிக்கா சென்றுள்ள தளபதி 68 டீம், விஜய்யை ஹாலிவுட் ஹீரோ லுக்கில் மாற்றும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள USC ICT ரிசர்ச் யுனிவர்ஸிட்டியில் விஜய் பாடி ஸ்கேனிங் செய்துகொண்ட போட்டோஸ் செம்ம வைரலாகி வருகிறது.

 Thalapathy 68: Vijay at Los Angeles for the body scanning for Thalapathy 68 film

ஹாலிவுட் ஹீரோக்களுக்கு சவால் விடும் விஜய்: விஜய் கேரியரில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக லியோ உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால், இப்போது லியோவை விடவும், விஜய்யின் தளபதி 68 பற்றிய அப்டேட்கள் ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

இதன் மூலம் முதன்முறையாக விஜய் - வெங்கட் பிரபு - யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைவது குறிப்பிடத்தக்கது. தளபதி 68 படத்தின் பூஜை செப்டம்பரில் நடைபெறும் எனவும், அக்டோபர் முதல் வாரத்தில் விஜய் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய் இரண்டு பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டபுள் ஆக்‌ஷனில் நடிக்கவுள்ள விஜய்யின் இரண்டு லுக்கும் ரொம்பவே தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுவரை டபுள் ஆக்‌ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுக்க வெங்கட் பிரபு பிளான் செய்துள்ளாராம். இதற்கு விஜய்யும் ஏஜிஎஸ் நிறுவனமும் க்ரீன் சிக்னல் கொடுக்க, இப்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தளபதி 68 வேலைகள் தொடங்கிவிட்டன.

அதன்படி, விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள University of Southern California - Institute for Creative Technologies-க்கு சென்றுள்ளனர். மேக்கப், பாடி ஸ்கேனிங் போன்ற ஹை-டெக்கான ரிசர்ச்களுக்கு பிரபலமான இந்த இன்ஸ்டிடியூட்டில், இதுவரை 50 ஹாலிவுட் படங்களுக்கான வேலைகள் மட்டுமே நடந்துள்ளனவாம். அதேபோல், இதுவரை எந்த இந்திய படங்களும் இந்த டெக்னாலஜியை பயன்படுத்தவில்லை என சொல்லப்படுகிறது.

 Thalapathy 68: Vijay at Los Angeles for the body scanning for Thalapathy 68 film

இந்நிலையில் University of Southern California - Institute for Creative Technologies சென்றுள்ள விஜய், அங்கு ஃபுல் பாடி ஸ்கேனிங் செய்துள்ளார். சயின்ஸ் பிக்‌ஷன் படங்களில் வருவதை போல செம்ம ஹை-டெக்காக இருக்கும் ரிசர்ச் செண்டரில் விஜய் பாடி ஸ்கேனிங் செய்துள்ளார். இந்த போட்டோஸ் டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதேபோல், அந்த ஸ்டூடியோவில் விஜய் கேஷுவலாக சுற்றிப் பார்க்கும் போட்டோவும் வைரலாகி வருகிறது.

பெரும்பாலும் தனது படங்களில் கெட்டப் கூட சேஞ்ச் செய்து நடிக்காத விஜய், தளபதி 68க்காக வேற லெவலில் ரிஸ்க் எடுத்து வருகிறார். இதனால், இந்தப் படத்தின் மேக்கிங் உட்பட அனைத்தும் ஹாலிவுட் ஸ்டைலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தளபதி 68 படத்தில் பிரபுதேவா, மாதவன் இருவரும் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X