Thalapathy 68: “சென்னை 28 கேங் வரவே கூடாது..” வெங்கட் பிரபுவுக்கு விஜய் போட்ட கண்டிஷன்!!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
லியோ வெளியாகும் முன்பே தளபதி 68 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார் விஜய்.
ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.
இந்நிலையில் தளபதி 68 படத்திற்காக வெங்கட் பிரபுவுக்கு பல கண்டிஷன்கள் போட்டுள்ளாராம் விஜய்.

சென்னை 28 கேங் வரவே கூடாது: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய், இந்தாண்டு படு பிஸியாக நடித்து வருகிறார். பொங்கலுக்கு விஜய் நடித்த வாரிசு வெளியானது. அதனைத் தொடர்ந்து உடனடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோவில் நடித்தார். இந்தப் படமும் வரும் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனிடையே லியோ படப்பிடிப்பு முடியும் முன்னரே தளபதி 68ல் கமிட்டானார் விஜய்.
அதன்படி விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக படப்பிடிப்பும் தொடங்கியுள்ளதாம். விஜய்யுடன் சினேகா, அரவிந்த் சாமி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், வைபவ், மீனாட்சி செளத்ரி, ஜெய் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கமாக வெங்கட் பிரபுவின் படத்தில் அவரது தம்பி பிரேம்ஜி நடிக்காமல் இருக்கமாட்டார். அவருக்காகவே எப்படியாவது ஒரு கேரக்டரை வைத்துவிடுவார் வெங்கட் பிரபு. ஆனால், தளபதி 68ல் பிரேம்ஜி நடிக்க வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. அவரை எதாவது ஒருவகையில் தளபதி 68 உள்ளே கொண்டுவந்து விட வேண்டும் என வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளாராம்.
அதேநேரம் தளபதி 68 பூஜை விழாவில் குறைவான நபர்களுக்கு மட்டுமே அழைப்பும் அனுமதியும் வழங்கப்பட்டதாம். அதிலும் வெங்கட் பிரபுவின் கேங்கான சென்னை 28 டீமில் இருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது. அவர்களை அழைக்க வேண்டாம் என ஹீரோவே உத்தரவிட்டதாகவும், அதனால் தான் யாரும் பங்கேற்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் சென்னை 28 டீமில் இருந்து ஜெய், வைபவ் மட்டுமே தளபதி 68ல் கமிட்டாகியுள்ளனர். அவர்கள் தவிர மற்ற யாரும் தளபதி 68 ஸ்பாட்டுக்கு வர வேண்டாம் எனவும், எக்காரணம் கொண்டும் தளபதி 68 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ, வீடியோ எதுவும் லீக்காகி விடக் கூடாது என்றும் விஜய் கண்டிஷன் போட்டுள்ளாராம். இதனால் வெங்கட் பிரபு & டீம் கொஞ்சம் சீரியஸ் மோடில் தளபதி 68 படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











