தளபதி 68 லுக் இதுதானா?.. ரொம்ப டல்லா இருக்காரே விஜய்.. வெங்கட் பிரபு என்னத்த கிண்டுறாரோ!
சென்னை: இந்த ஆண்டு பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருதுகள் மற்றும் ஊக்கத்தொகையை நடிகர் விஜய் கொடுக்கும் போது இருந்த அவருடைய லுக் இப்போ இல்லையே ஏன் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. லியோ படத்தை முடித்து விட்டு தளபதி 68 படத்தின் பட பூஜை விழாவில் கூட விஜய் அவ்வளவு ஹேண்ட்ஸம் ஆக இருந்தாரே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்தபோதே விஜய்யின் புதிய தோற்றம் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. இந்நிலையில், நெல்லை மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் விழாவிலும் விஜய்யின் லுக் இப்படி இருக்கிறதே என பலவிதமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

லியோவில் ரெண்டு லுக்: இந்த ஆண்டு வாரிசு படத்தில் இளமையான தோற்றத்தில் நடித்திருந்த நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் 2 லுக்கில் நடித்து மாஸ் காட்டினார். வயதுக்கு வந்த மகன் இருக்கும் அப்பாவாக பார்த்திபன் லுக்கில் மெச்சூரிட்டியுடனும் ஃபிளாஷ்பேக்கில் வரும் கேங்ஸ்டர் லியோவாக செம ஸ்வேகான லுக்கிலும் தெறிக்கவிட்டார் விஜய்.
கல்வி விருது விழா: இந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை நீலாங்கரையில் கல்வி விருது விழாவை நடத்தினார் நடிகர் விஜய். சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் நின்று 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்களை தொகுதி வாரியாக தேர்வு செய்து நடிகர் விஜய் விருது வழங்கினார். அதன் பின்னர் ஒரே ஆண்டில் மீண்டும் பொதுமக்களை நேரில் சந்திக்க ஆரம்பித்துள்ளார் நடிகர் விஜய்.

செம க்யூட்டான லுக்: அந்த விழாவில் விஜய்யின் செம க்யூட்டான லுக்கை பார்த்த ரசிகர்கள் பலரும் ஏஜ் இஸ் ரிவர்ஸ் கியர் என கொண்டாடி தீர்த்தனர். மாணவர்கள், மாணவிகள் விஜய்யுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். ரசிகர்களும் இந்த லுக்கில் தளபதியுடன் ஒரு போட்டோவாவது எடுத்து விட முடியாதா என ஏங்கினர்.

தளபதி 68 பூஜை: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அந்த பூஜையின் போது டிசர்ட் அணிந்து கொண்டு செம மாஸாக விஜய் கலந்து கொண்டார். அந்த விழாவில் கூட அவரது லுக் வேறலெவலில் இருந்தது. அதை பார்த்த ரசிகர்கள் இதே லுக்கில் தான் விஜய் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளாரா என எதிர்பார்த்தனர்.
புது லுக் எப்படி இருக்கு?: ஆனால், தற்போது நடிகர் விஜய்யின் புதிய தோற்றம் அந்த அளவுக்கு சூப்பராக இல்லையே என்றும் மீசையை ரொம்ப ட்ரிம் செய்து விட்டு இருக்கிறார் என்றும் இளமையான தோற்றத்திற்காக இப்படி மாறியிருக்கிறாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். மேலும், தொடர்ந்து நடிகர் விஜய் பார்க்க ரொம்ப டல்லா இருக்காரே ஏன் என்ன ஆச்சு என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

ரசிகர்கள் ஹேப்பி: புத்தாண்டுக்கு முன்னதாக தளபதியின் தரிசனம் கிடைத்ததே போதும் என அவரை பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள் நெல்லையில் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்க முயற்சி செய்வதும், அய்யோ என் அண்ணனை பார்த்துட்டேன் என பெண் ரசிகைகள் சந்தோஷப்படுவதை பார்த்து ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி ஆகி உள்ளனர். புத்தாண்டுக்கு தளபதி 68 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானால் வேறலெவல் ட்ரீட்டாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











