Thalapathy 68: அவசரம் வேண்டாம்... திடீரென ஆர்டர் போட்ட விஜய்... தாமதமாகும் தளபதி 68 ஷூட்டிங்!
சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும் என சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.
இப்படம் குறித்து அஃபிஸியல் அப்டேட் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், ஷூட்டிங் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

தளபதி 68 ஷூட்டிங் அப்டேட்: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பீஸ்ட் முடிந்த கையோடு வாரிசு படத்தில் நடித்தவர், அதனைத் தொடர்ந்து தற்போது லியோவில் நடித்து வருகிறார். கடந்த ஜனவரியில் தொடங்கிய லியோ படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் லியோ ஷூட்டிங் முடிவுக்கு வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ, விஜய்யின் 67வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஷன் ஜானரில் உருவாகும் லியோ அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகிறது. இதனைத் தொடர்ந்து தனது 68வது படத்தில் அபிஸியலாகவே அறிவித்திருந்தார். அதன்படி விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
முதன்முறையாக இணைந்துள்ள விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தளபதி 68 படம் குறித்து இதற்குமேல் எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், விஜய் ஜோடியாக ஜோதிகா, சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், லியோ ஷூட்டிங் முடிந்ததும் உடனடியாக தளபதி 68ல் விஜய் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. இதற்காக விஜய் ஏற்கனவே கால்ஷீட் கொடுத்துவிட்டதாகவும் தளபதி 68 படத்தையும் வேகமாக முடிக்க வேண்டும் என படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த முடிவில் இருந்து திடீரென பின்வாங்கிய விஜய், லியோ ஷூட்டிங் முடிந்ததும் 2 மாதங்கள் ஓய்வில் இருக்க திட்டமிட்டுள்ளாராம்.
அதனால் தளபதி 68 படப்பிடிப்பை அக்டோபர் மாதம் தொடங்கலாம் என வெங்கட் பிரபுவிடம் கூறியுள்ளாராம். தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் நடிக்க விருப்பம் இல்லாமல் தான் விஜய் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. அதேநேரம் தளபதி 68 ஸ்கிரிப்ட்டை வெங்கட் பிரபு இன்னும் முடிக்கவில்லை எனவும், அதுதான் உண்மையான காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











