Thalapathy 68: லியோ ரிலீஸ் தேதியில் அடுத்த சர்ப்ரைஸ்... தளபதி 68க்கு ரெடியான விஜய்: டைரக்டர் இவரா?

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபரில் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், லியோ வெளியாகும் அக்டோபர் மாதம், தளபதி 68 படப்பிடிப்பை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம்.

 Thalapathy 68: Vijays Thalapathy 68 is to go on Floors from October under Atlee direction

தளபதி 68 படத்தின் இயக்குநர் முதல் மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

விஜய்யின் தளபதி 68
விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி மாதம் வெளியானது. வாரிசு வெளியானதுமே உடனடியாக லியோ ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் விஜய். எப்போதும் ஒரு படம் ரிலீஸானதும் வெளிநாடு டூர் சென்றுவிட்டு திரும்பிய பிறகே, அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார். ஆனால், வாரிசு ரிலீஸாகும் போதே லியோ படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.

அதேபோல் தனது அடுத்த படத்திற்கும் ரெடியாகிவிட்டாராம் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. லியோ டைட்டில் டீசர் வெளியாகும் போதே, படத்தின் ரிலீஸ் தேதியையும் லோகேஷ் அறிவித்துவிட்டார். இதனால், விஜய்யின் அடுத்த படம் யாருடன், அது எப்போது தொடங்கும் என்ற கேள்விகள் எழுந்தன.

 Thalapathy 68: Vijays Thalapathy 68 is to go on Floors from October under Atlee direction

இந்த கேள்விகளுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் தளபதி 68 படத்தை அட்லீ இயக்கலாம் என சொல்லப்பட்டு வந்தது. தற்போது இந்த தகவல் உண்மை என்று தான் கூறப்படுகிறது. அதன்படி, விஜய் - அட்லீ இணையும் தளபதி 68 படத்தின் ஷூட்டிங், அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாம். லியோ ரிலீஸாகும் போது தளபதி 68 அப்டேட்டை வெளியிடவுள்ளார்களாம்.

விஜய் - அட்லீ கூட்டணி, தெறி, மெர்சல், பிகில் என ஏற்கனவே ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து மிரட்டியுள்ளது. தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கி வரும் அட்லீ, மீண்டும் விஜய்யுடன் இணையவே விரும்புகிறாராம். ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படம், ஜூன் மாதம் வெளியாகிறது. அதனால், ஜவான் வெளியானதும் தளபதி 68 ஸ்க்ரிப்ட் வேலைகளில் அட்லீ கவனம் செலுத்தவுள்ளாராம்.

இந்தப் படத்தையும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும், ஏஆர் ரஹ்மான் அல்லது அனிருத் இவர்களில் ஒருவர் தான் இசையமைப்பாளராக கமிட்டாக உள்ளார்களாம். ஷாருக்கானின் ஜவான் படத்தை முடித்துவிட்டு சல்மான் கானுடன் அட்லீ இணையலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், ஜவான் படப்பிடிப்பின் நடுவிலேயே விஜய்க்கு ஒரு ஒன்லைன் சொல்லி ஓக்கே வாங்கிவிட்டாராம் அட்லீ.

அதனால், விஜய்யின் தளபதி 68 படத்தை அட்லீ தான் இயக்குவார் என தெரிகிறது. மேலும், இந்தப் படம் பிகில் படத்தின் ராயப்பன் கேரக்டரின் பின்னணியில் உருவாகலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X