Thalapathy 68: “தள்ளாடும் லியோ... ரெடியான தளபதி 68 அப்டேட்..”: விரைவில் சர்ப்ரைஸ் வீடியோ!

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் இந்த வாரம் 19ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

 Thalapathy 68: Vijay’s Thalapathy 68 Poojai Video loading next week with Yuvan’s Special BGM

இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில், லியோ படத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருவதால், விரைவில் தளபதி 68 அப்டேட்டை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

விரைவில் தளபதி 68 அப்டேட்

விஜய் நடிப்பில் இந்தாண்டு இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. பொங்கல் ஸ்பெஷலாக வாரிசு வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது லியோ திரைப்படம் ரிலீஸாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், LCU படமாக வெளியான லியோவுக்கு முதல் நாளில் சூப்பரான ஓபனிங் கிடைத்தது. அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் இதுவரை 300 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்நிலையில், லியோ படத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்யத் தொடங்கியுள்ளனர். விஜய் மட்டுமின்றி லோகேஷ் கேரியரிலும் லியோ தான் மிக மோசமான படம் என விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லியோ தற்போது பாக்ஸ் ஆபிஸில் தடுமாறி வருவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் லியோ ப்ளாக் பஸ்டர் தான் என விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதனிடையே விஜய் தனது 68வது படத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டாராம். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, தற்காலிகமாக தளபதி 68 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சியும் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. அதேவேகத்தில் ஒரு பாடல் காட்சியையும் ஷூட் செய்து முடித்துவிட்டார் வெங்கட் பிரபு.

விஜய்யுடன் சினேகா, அரவிந்த் சாமி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், வைபவ், மீனாட்சி செளத்ரி, ஜெய் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விரைவில் தளபதி 68 படத்தின் அப்டேட்டை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி, முதலில் தளபதி 68 பூஜை வீடியோவை அடுத்த வாரம் வெளியிடவிருப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய், பிரபுதேவா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த பூஜை விழா, ரொம்பவே சிம்பிளாக தான் நடைபெற்றுள்ளது. அதனால், யுவனின் பிஜிஎம் உடன் இந்த வீடியோவை வெளியிட வெங்கட் பிரபு பிளான் செய்துள்ளார். லியோ ட்ரோல்கள் அதிகரித்துவிட்டதால், உடனே தளபதி 68 அப்டேட் மூலம் ரசிகர்களை கூல் செய்திட விஜய்யும் ரெடியாகிவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X