Thalapathy 68: பான் இந்தியா படமாக உருவாகிறதா தளபதி 68..? ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்த விஜய்!

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி விஜய்.

ஏஜிஎஸ் தயாரிக்கும் விஜய்யின் தளபதி 68 திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

 Thalapathy 68: Vijays Thalapathy 68 will be released in April 2024 as a Pan India film

இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை தளபதி விஜய் முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68 ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்
விஜய்யின் 67வது படமான லியோ படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தத் திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் தனது 68வது படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டாராம்.

அட்லீ, கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் ஆகியோரில் ஒருவர் தான் தளபதி 68 படத்தை இயக்குவார் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது வெங்கட் பிரபு தான் தளபதி 68 படத்தை இயக்கவுள்ளதாகவும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டும் இல்லாமல் இன்னும் சில தினங்களில் தளபதி 68 படத்தின் அபிஸியல் அப்டேட்டை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இதனிடையே, தளபதி 68 படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் கன்ஃபார்ம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. டைம் லூப் பின்னணியில் சயின்ஸ் பிக்‌ஷன் படமாகவோ அல்லது ஆக்‌ஷன் ஜானர் படமாகவோ தளபதி 68 உருவாகவுள்ளதாம். அதனால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக இது ரிலீஸாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தளபதி 68 படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் இரண்டாவது வாரம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், அடுத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தளபதி 68 படத்தை ரிலீஸ் செய்ய விஜய் முடிவு செய்துள்ளாராம். இதனால், குறுகிய காலத்தில் இந்தப் படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கஸ்டடி படம் வெளியானதுமே தளபதி 68 கதையை முழு மூச்சாக எழுதத் தொடங்கிவிட்டார் வெங்கட் பிரபு.

 Thalapathy 68: Vijays Thalapathy 68 will be released in April 2024 as a Pan India film

அதனால், லியோ படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக தளபதி 68 படத்தில் நடிக்க விஜய் கால்ஷீட் கொடுத்துவிட்டாராம். வாரிசு வெளியானதும் ரெஸ்ட் எடுக்காமல் லியோ படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய், இப்போதும் ஓய்வே இல்லாமல் தளபதி 68 ஷூட்டிங்கில் பங்கேற்கவுள்ளார். அதேநேரம், தளபதி 68 படத்திற்காக விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் என வெளியான தகவல்கள் மட்டும் வதந்தி என தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X