Thalapathy 68: தளபதி 68 பாங்காங் ஷெட்யூல் ஓவர்... சென்னை திரும்பிய விஜய்... ட்ரெண்டாகும் வீடியோ!
சென்னை: விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் சக்சஸ் மீட் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
லியோ சக்சஸ் மீட் முடிந்ததுமே தளபதி 68 படப்பிடிப்புக்காக பாங்காங் சென்றார் விஜய். இந்நிலையில், பாங்காங் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிய விஜய்யின் வீடியோ வைரலாகி வருகிறது.

ட்ரெண்டாகும் விஜய்யின் லேட்டஸ்ட் வீடியோ
விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்கு, தற்காலிகமாக தளபதி 68 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. லியோ ஷூட்டிங் முடியும் முன்பே தளபதி 68 படத்தின் டீம் அபிஸியலாக கன்ஃபார்ம் ஆகிவிட்டது. சில தினங்களுக்கு முன்னர் தளபதி 68 பூஜை வீடியோவும் வெளியானது.
அதில், இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றியும் அபிஸியலாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் கமிட்டாகியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். தளபதி 68 முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.
அப்போது விஜய்யின் ஓபனிங் சாங் ஷூட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து பாங்காங் சென்றது படக்குழு. லியோ சக்சஸ் மீட் முடிந்த உடனே விஜய்யும் பாங்காங் சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அங்கு ஹை ஆக்ஷன் சீக்வென்ஸான கார் சேஸிங் ஃபைட் சீன் ஷூட் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஃபைட் சீன் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதாம்.
இதனையடுத்து பாங்காங் ஷெட்யூலை முடித்துவிட்ட விஜய், அங்கிருந்து சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து விஜய் வெளியேறும் வீடியோ வைரலாகி வருகிறது. எப்போதும் போல மாஸ்க் அணிந்து சைலண்டாக வெளியேறிய விஜய்க்கு, விமான நிலையத்தில் இருந்த ரசிகர்கள் தீபாவளி வாழ்த்துத் தெரிவித்தனர். பதிலுக்கு விஜய்யும் கை தூக்கி அவர்களுக்கு 'ஹாய்’ சொன்னபடி சென்றார்.
தளபதி 68 பாங்காங் ஷெட்யூல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளதாம். பிரசாந்த் ஸ்டூடியோவில் தளபதி 68 படத்திற்காக செட் போடப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு தினங்களில் அங்கு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











