Thalapathy 68: என்ன இது..? விஜய்யை மொத்தமாக மாத்திட்டாங்க!! தளபதி 68 யுனிவர்ஸ் இதுதானா..?
சென்னை: வாரிசு, லியோ, தளபதி 68 என விஜய் அடுத்தடுத்து படங்களில் நடித்து மாஸ் காட்டி வருகிறார்.
தற்போது தளபதி 68ல் நடிக்கவுள்ள விஜய், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று மேக்கப் டெஸ்ட், பாடி ஸ்கேனிங் டெஸ்ட் எடுத்துள்ளார்.
இதனால் விஜய்யின் லுக், அவரது ஸ்டைல் எப்படி இருக்கும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், விஜய்யின் தளபதி 68 போஸ்டர் ஒன்று ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

தளபதி 68 விஜய் லுக் இதுதானா..?: விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் லியோ ரிலீஸாகும் முன்பே தளபதி 68 படத்தில் பிஸியாகிவிட்டார் விஜய். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் தளபதி விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன் முறையாக இணையவுள்ளது. இவர்களுடன் யுவன் சங்கர் ராஜாவும் இணைவதால், தளபதி 68 படத்திற்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார். இதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள University of Southern California - Institute for Creative Technologies-இல் பாடி ஸ்கேனிங் டெஸ்ட் எடுத்துள்ளார் விஜய்.
இதனால், தளபதி 68 படத்தில் விஜய்யின் லுக் எப்படி இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய்யின் போஸ்டர் ஒன்று சர்ப்ரைஸ்ஸாக வெளியாகி ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளது. அனிமேட்டிங் ஸ்கெட்ச் ஆர்ட் மூலம் கார்ட்டூன் கேரக்டர் போல விஜய்யின் லுக்கை அப்படியே மாற்றியுள்ளனர். இந்த ஆர்ட் ஒர்க் போஸ்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அதேநேரம் இது தளபதி 68 படக்குழு வெளியிட்ட போஸ்டர் இல்லையென்பதும் தெரியவந்துள்ளது. விஜய்யின் ரசிகர் ஒருவர் தளபதி 68 படத்தில் விஜய்யின் லுக் இப்படித்தான் இருக்கும் என அவராகவே கிரியேட் செய்துள்ளார். ஆனாலும், இந்த போஸ்டரில் விஜய்யின் வித்தியாசமான லுக், அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. லியோ வெளியாகும் முன்பே தளபதி 68 மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியுள்ளது.
இந்நிலையில், தளபதி 68 படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, மாதவன், ப்ரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பது உறுதி என சொல்லப்படுகிறது. அதேநேரம் விஜய் ஜோடியாக ஜோதிகா நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டது, பின்னர் அவருக்குப் பதிலாக சிம்ரன் நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் இந்த ரேஸில் தற்போது சினேகாவும் இடம்பிடித்துள்ளதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











