Thalapathy 68: இனிமேல் நோ ரெஸ்ட்... லியோ வேகத்தில் தளபதி 68... ரெடியான வெங்கட் பிரபு டீம்
சென்னை: விஜய் நடித்து வரும் லியோ படப்பிடிப்பு இம்மாதம் நிறைவுபெறும் என சொல்லப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இதனிடையே தனது 68வது படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு என விஜய்யே அறிவித்துவிட்டார்.
இந்நிலையில், அதிக எதிர்பார்ப்பில் உள்ள தளபதி 68 படத்தின் ஷூட்டிங் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.
லியோ வேகத்தில் தளபதி 68 ஷூட்டிங்:கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் திரையுலகில் விஜய் தான் பேசுபெருளாக காணப்படுகிறார். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என பலரும் போட்டிப்போட்டு தங்களது கருத்தை கூறி வருகின்றனர். இன்னொரு பக்கம் அவரது அரசியல் என்ட்ரி பற்றியும் அதிரிபுதிரியான அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் நடந்துமுடிந்த கல்வி விருது வழங்கும் விழாவில் கூட விஜய்யின் அரசியல் ஆர்வத்தை காண முடிந்தது. இதனிடையே அவர் லியோ படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகிறது. இதனால் முழுவீச்சில் நடைபெற்று வரும் லியோ படப்பிடிப்பு விரைவில் முடிவு பெறும் என சொல்லப்படுகிறது.
முக்கியமாக விஜய் தனது போர்ஷனை இன்னும் ஒரு வாரத்திற்குள் முடித்துவிடுவாராம். காஷ்மீர், சென்னையை தொடர்ந்து திருப்பதி அருகே நடக்கும் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்கவுள்ளார். அத்துடன் விஜய்யின் போர்ஷன் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. பின்னர் லியோ படத்தின் டப்பிங் வேலைகளையும், இசை வெளியீட்டு விழாவையும் அடுத்தடுத்து அதேவேகத்தில் முடிக்கவுள்ளார் விஜய்.
இதனால், ஓரிரு மாதங்கள் ஓய்வில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய், தனது அடுத்த பாய்ச்சலுக்கு ரெடியாகிவிட்டாராம். அதன்படி, லியோ வெளியாகும் முன்பே தளபதி 68 ஷூட்டிங்கில் கலந்துகொள்ள முடிவெடுத்து உள்ளாராம். இதற்காக ஆகஸ்ட் மாதம் முதல் தளபதி 68 படத்திற்காக கால்ஷீட்டும் கொடுத்து வெங்கட் பிரபுவுக்கு சிக்னல் கொடுத்துவிட்டாராம்.
வாரிசு படப்பிடிப்பை முடித்துவிட்டு ரெஸ்ட் எடுக்காமல் லியோ ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் விஜய். இப்போது அதேபோல லியோ செட்டில் இருந்து வெளியேறியதும், அப்படியே தளபதி 68ல் நடிக்கவுள்ளாராம். இந்தப் படத்தையும் குறுகிய காலத்தில் எடுத்துமுடிக்க வேண்டும் என விஜய் பிளான் செய்துள்ளாராம். அதற்கு வெங்கட் பிரபுவும் ஓக்கே சொல்லிவிட்டதால் உடனடியாக படப்பிடிப்பை தொடங்க உள்ளார்களாம்.
ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தளபதி 68 ஷூட்டிங்கை ஆரம்பித்து அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் முடிக்க பிளான் செய்துள்ளார்களாம். மேலும், 2023 தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக தளபதி 68 படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். அதேநேரம் லியோ ரிலீஸான பின்னர் தான் தளபதி 68 படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட்ஸ் வெளியாகும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











