Thalapathy 68: மீண்டும் சிலுவை போஸ்டர்... விஜய்யின் தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக்... வெளியானது மாஸ் அப்டேட்
சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் மூவியாக உருவாகி வரும் தளபதி 68, அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார். அதற்காக வெளியான போஸ்டர் வைரலாகி வருகிறது.
தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெடி
விஜய் நடித்து வரும் தளபதி 68 திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே தளபதி 68ல் விஜய்யுடன் மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டணி இணைந்துள்ளது. விஜய் அப்பா, மகன் என இரண்டு அல்லது மூன்று கேரக்டர்களில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார். அதன்படி இன்று மாலை 6 மணிக்கு தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது. இதனை முன்னிட்டு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு. அதில், ஒரு விமானம் பறந்து வந்து தரை இறங்குவதை போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் சிலுவை வடிவிலும் இந்த போஸ்டர் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏற்கனவே வாரிசு, லியோ என விஜய்யின் படங்களில் சிலுவை அடையாளம் இடம்பெற்றிருந்தது. இப்போது தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட் போஸ்டரிலும் சிலுவை இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கேப்டன் விஜயகாந்த் மறைவு காரணமாக தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு ஒத்தி வைக்கப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால், அப்படி இல்லாமல் ஏற்கனவே சொன்னபடி இன்று மாலை தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து நாளை (ஜன.1) தளபதி 68 டைட்டில், செகண்ட் லுக் போஸ்டர் ஆகியவையும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் தளபதி 68 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் தொடங்குகிறது. ஜனவரி முதல் வாரம் தொடங்கும் இந்தப் படப்பிடிப்பில் விஜய்யுடன் மற்ற நடிகர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
தளபதி 68 திரைப்படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. ஹாலிவுட் ஹீரோ வில் ஸ்மித் நடித்த 'ஜெமினி மேன்' படத்தின் ரீமேக்காக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் தளபதி 68 விஜய் ஸ்டைலில் கமர்சியலான மூவியாக உருவாகியுள்ளது என படத்தில் நடித்துள்ள சிலர் கூறியிருப்பதும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. இதனால் தளபதி 68 எந்த மாதிரியான ஜானர் மூவி என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











