Thalapathy 68: விஜய்க்காக தர லோக்கலில் இறங்கிய யுவன்... தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
சென்னை: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.
லியோ ரிலீஸுக்கு முன்பே தளபதி 68 படத்தின் முதற்கட்ட வேலைகளில் பிஸியாகிவிட்டார் விஜய்.
தளபதி 68 படத்துக்காக விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளனர்.
இன்னொரு பக்கம் யுவன் சங்கர் ராஜா தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் கம்போஸிங் வேலைகளில் வெறித்தனம் காட்டி வருகிறாராம்.

தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்: விஜய் நடிப்பில் அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் லியோ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளதால், ப்ரீ தியேட்டர் பிஸினஸில் லியோ மாஸ் காட்டி வருகிறதாம். இன்னொரு பக்கம் லியோவை விஞ்சும் அளவில் விஜய்யின் தளபதி 68 மீதான ஹைப் தாறுமாறாக எகிறியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள University of Southern California - Institute for Creative Technologies-இல் விஜய்க்கு மேக்கப் டெஸ்ட், பாடி ஸ்கேனிங் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் தளபதி 68 ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
விஜய், வெங்கட் பிரபு இருவரும் அமெரிக்காவில் சம்பவம் செய்து வரும் நிலையில், யுவன் சங்கர் ராஜா தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். 'புதிய கீதை' படத்துக்குப் பின்னர் விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ள யுவன், தளபதி 68ல் மாஸ் காட்ட காத்திருக்கிறாராம். இதனால், லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் கம்போஸிங் அசுர வேகத்தில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
அதன்படி, தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள், தரலோக்கலில் மரண குத்து பாடலாக இருக்கும் என யுவன் தெரிவித்துள்ளார். SRM கல்லூரி விழாவில் பங்கேற்ற அவர், தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து செம்ம அப்டேட் கொடுத்துள்ளார். விஜய் - யுவன் காம்போ நீண்ட வருடங்களுக்குப் பின்னர் இணைந்துள்ளதால், நிச்சயமாக தளபதி 68 ஆல்பம் ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்போதே தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அப்டேட்டை யுவன் கொடுத்துள்ளது, எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது. தளபதி 68 படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் பூஜையுடன் தொடங்கும் எனவும், அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பாக மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, மாதவன், சினேகா, ப்ரியங்கா மோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











