Thalapathy 68: அசுர வேகத்தில் தளபதி 68 ஷூட்டிங்... ரிலீஸ் தேதியை முடிவு செய்த விஜய்!

சென்னை: விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தளபதி 68 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68 ரிலீஸ் தேதி அப்டேட்
கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் தற்போது தனது 68வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வாரிசு, லியோ படங்களைத் தொடர்ந்து விஜய்யின் தளபதி 68-ம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக தளபதி 68 படத்தில் இணைந்துள்ளதும் அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது.

Thalapathy 68: Vijays Thalapathy 68 is expected to release in June or July next year

இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருகிறாராம் விஜய். இதற்காக அவரது லுக் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் வகையில் வெங்கட் பிரபு பார்த்து பார்த்து செதுக்கியுள்ளாராம். இதனால் தளபதி 68ல் விஜய்யின் லுக், ஸ்டைல், கெட்டப் எல்லாமே வேற லெவலில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தளபதி 68 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய தளபதி 68 ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை, தாய்லாந்து, மீண்டும் சென்னை, துருக்கி, தற்போது ஹைதராபாத் என கேப் விடாமல் தளபதி 68 படப்பிடிப்பை நடத்தி வருகிறார் வெங்கட் பிரபு. இதனால், அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் தளபதி 68 ஷூட்டிங் முடிந்துவிடும் எனத் தெரிகிறது.

இதனால் தளபதி 68 ரிலீஸ் தேதியையும் விஜய் முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி தளபதி 68 படத்தை 2024 ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியிட விஜய் பிளான் செய்துள்ளாராம். சம்மர், தீபாவளி என எதுவும் இல்லாமல், லியோ பாணியில் தளபதி 68 படத்தை வெளியிட படக்குழு யோசித்து வருகிறதாம். இதனிடையே ஜனவரி 1ம் தேதி தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 68 படத்தில் விஜய்யுடன் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ், மாளவிகா ஷர்மா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X