Thalapathy 68: லியோ ஐடியாவில் தளபதி 68 ரிலீஸ்... விஜய் ரசிகர்களுக்கு தெறி மாஸ் ட்ரீட் ரெடி!
சென்னை: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் மூலம் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது.

தளபதி 68 படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டைட்டில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், தளபதி 68 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
தளபதி 68 ரிலீஸ் தேதி
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அதேநேரம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக சொல்லப்படுகிறது. லியோ ரிலீஸாகும் முன்பே தனது 68வது படத்தில் பிஸியாகிவிட்டார் விஜய்.
வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் தளபதி 68 பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், நடனப் புயல் பிரபுதேவா, ஜெயராம், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, யோகி பாபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதனால், இந்தப் படத்துக்கும் ரசிகர்களிடம் ஹைப் காணப்படுகிறது.
சென்னையில் தொடங்கிய தளபதி 68 படப்பிடிப்பு, அடுத்து தாய்லாந்தில் நடைபெற்றது. பின்னர் சென்னை திரும்பிய தளபதி 68 டீம், இங்கு 5 நாட்கள் வரை படப்பிடிப்பை நடத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது துருக்கியில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் வெங்கட் பிரபு. அங்கே விஜய், இவானா தொடர்பான காட்சிகள் ஷூட் செய்யப்படவுள்ளதாம். இந்நிலையில், தளபதி 68 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விஜய்யின் தளபதி 68, அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024ல் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக் கிழமை வருகிறது. மேலும் அதன் தொடச்சியாக நவம்பர் 1 முதல் 3ம் தேதி வரை விடுமுறை உள்ளது. 4 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால், தீபாவளி ரேஸில் தளபதி 68 படத்தை ரிலீஸ் செய்துவிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ, ஆயுத பூஜை விடுமுறையை திட்டமிட்டு கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது. அதாவது 6 நாட்கள் ஆயுத பூஜை விடுமுறையை டார்க்கெட் செய்து லியோவை ரிலீஸ் செய்தனர். இதனால், இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் குறை வைக்கவில்லை. இதே வழியில் தற்போது தளபதி 68ம் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் துருக்கியை தொடர்ந்து பிரேஸில் உள்ளிட்ட பல நாடுகளில் தளபதி 68 ஷூட்டிங்கை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதேபோல், ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடித்துவிட வேண்டும் என வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











