Thalapathy 68: “சயின்ஸ் பிக்‌ஷனா.. வாய்ப்பே இல்ல..”: தளபதி 68 கதையே வேற.. விஜய்யின் மாஸ்டர் பிளான்!

சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படம் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகி வருவதாக சொல்லப்பட்டது. ஆனால், தளபதி 68 கதை குறித்து செம்ம மஸ்ஸான அப்டேட் கிடைத்துள்ளது.

Thalapathy 68: Vijays Thalapathy 68 is Going to be a New Version of Pokkiri

தளபதி 68 கதையே வேற
கோலிவுட்டின் மாஸ் ஹீரோ விஜய், தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். வாரிசு, லியோ படங்களைத் தொடர்ந்து தளபதி 68க்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அதேபோல் தளபதி 68 படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, சில்வர் ஜுப்ளி ஹீரோ மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் கமிட்டாகியுள்ளனர். லியோ வெளியாகும் முன்பே தளபதி 68ல் பிஸியாகிவிட்டார் விஜய். முதல் வேலையாக அமெரிக்கா சென்ற வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி இருவரும், விஜய்யையும் அங்கே வரவைத்து அவருக்கு மேக்கப் டெஸ்ட்டிங் எடுத்தனர்.

அதேபோல், தளபதி 68 படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், அதற்காக அவரது லுக்கை ரொம்ப வித்தியசமாக மாற்றியுள்ளதாகவும் சொல்லப்பட்டது. அதேநேரம், இந்தப் படம் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் டைம் ட்ராவலை பின்னணியாக வைத்து உருவாகுவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது வெளியான தகவலின் படி, தளபதி 68 சயின்ஸ் பிக்‌ஷன் படம் இல்லை எனத் தெரிகிறது.

வெங்கட் பிரபு ஸ்டைலில் விஜய்யின் தெறி மாஸ் ஆக்‌ஷன் படமாக தளபதி 68 உருவாகிறதாம். அதாவது விஜய்க்கு சூப்பர் ஹிட் கொடுத்த போக்கிரி படத்தின் ஸ்டைலில் தளபதி 68 இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் போக்கிரி படத்தை இயக்கிய பிரபுதேவா, தளபதி 68 மூவியில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தளபதி 68 சயின்ஸ் பிக்‌ஷன் ஜானர் இல்லை எனவும், அது பக்கா கமர்சியலாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதனால், விஜய் ரசிகர்களும் உற்சாகமாக உள்ளனர். இந்நிலையில் தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் வேற லெவலில் இருக்கும் என நடிகர் வைபவ் கூறியிருந்தார். யுவன் இசையமைத்துள்ள இந்தப் பாடல் விஜய் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் எனவும் ஹைப் கொடுத்துள்ளார். அதேபோல் புத்தாண்டு ஸ்பெஷலாக தளபதி 68 அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தளபதி 68 டைட்டில், விஜய் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை ஜனவரி 1ம் தேதி வெளியாகம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X