Thalapathy 68: தளபதி 68 சென்னை ஷெட்யூல் கேன்சல்... திடீரென படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

சென்னை: விஜய்யின் தளபதி 68 அபிஸியல் அப்டேட்ஸ் விரைவில் வெளியாகவுள்ளன. இதில் படத்தின் டைட்டில் குறித்து அபிஸியலாக அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே தளபதி 68 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், அதனை படக்குழு திடீரென கேன்சல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

தளபதி 68 சென்னை ஷெட்யூல் கேன்சல்
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறதாம். விஜய் - வெங்கட் பிரபு காம்போவில் தளபதி 68 படம் தரமான சம்பவமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்தப் படம் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 Thalapathy 68: Vijays Thalapathy 68 next schedule shooting starts in Sri Lanka

ஆனாலும் அதுகுறித்து இதுவரை படக்குழு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகவில்லை. விஜய்யுடன் மோகன், ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படியொரு பிரம்மாண்டமான மல்டி ஸ்டார்ஸ் மூவியில் விஜய் நடிப்பது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது.

தளபதி 68 ஷூட்டிங் தொடங்கும் முன்னரே, இந்தப் படத்தில் விஜய்யின் கெட்டப், லுக் இரண்டும் அமெரிக்காவில் டெஸ்ட் ஷூட் செய்யப்பட்டது. இதனால் விஜய்யின் கெட்டப் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்குமாம். அதேபோல், படப்பிடிப்பும் சென்னை, தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் என பல இடங்களில் நடைபெற்றது. கடைசியாக ஹைதராபாத்தில் நடந்த தளபதி 68 ஷூட்டிங் முடிவுக்கு வந்ததால் மொத்த படக்குழுவும் பிரேக்கில் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது தளபதி 68 படத்தின் சென்னை ஷெட்யூல் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாம். அதற்கு பதிலாக இலங்கையில் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி இலங்கையில் நடைபெறும் தளபதி 68 ஷூட்டிங், ஜனவரி 3ம் தேதி முதல் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நடைபெறும் தளபதி 68 படப்பிடிப்பில் விஜய்யின் ஆக்‌ஷன் சீன்ஸும் சில ரொமான்ஸ் காட்சிகளும் எடுக்க வெங்கட் பிரபு பிளான் செய்துள்ளார். தளபதி 68 படத்தின் மொத்த படப்பிடிப்பும் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடித்துவிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அப்போது தான் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தளபதி 68 படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என வெங்கட் பிரபுவுக்கு சிக்னல் கொடுத்துள்ளார் விஜய்.

நியூ இயர் ஸ்பெஷலாக டிச. 31ம் தேதி மாலை தளபதி 68 டைட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 68 டைட்டிலுடன் விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகவுள்ளதாம். இந்தப் படத்திற்கு Goat - Greatest of all Time என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனாலும் இந்த தகவல்களை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X