Thalapathy68: துருக்கியில் இருந்து தெலுங்கு தேசம் பறக்கும் விஜய்.. தளபதி68 அடுத்த அப்டேட் இதுதானா?

சென்னை: விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் துருக்கியில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy 68: Vijays Thalapathy 68 next schedule will be in Hyderabad

துருக்கியில் இருந்து ஹைதராபாத் பறக்கும் விஜய்
கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. அதேபோல், சென்னையில் நடந்த பூஜை நிகழ்ச்சியில் தளபதி 68 படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

சென்னையை தொடர்ந்து தாய்லாந்தில் நடைபெற்ற தளபதி 68 படப்பிடிப்பில், விஜய் நடித்த ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதாம். பின்னர் மீண்டும் சென்னையில் தொடர்ந்த தளபதி 68 படப்பிடிப்பு, தற்போது துருக்கிக்கு சென்றுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெறவுள்ள தளபதி 68 படப்பிடிப்புக்காக விஜய், இவானா உட்பட மேலும் சிலரும் சென்றுள்ளனர்.

துருக்கியில் மொத்தம் 25 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலான காட்சிகள் விஜய் தொடர்பானது எனவும் சொல்லப்படுகிறது. அதன்படி டிசம்பர் முழுவதும் துருக்கியில் தான் தளபதி 68 படப்பிடிப்பு நடைபெறுகிறதாம். அதன் தொடர்ச்சியாக தளபதி 68 ஷூட்டிங் சென்னையில் தொடரும் என சொல்லப்பட்டது.

ஆனால், சென்னைக்குப் பதிலாக ஹைதராபாத்தில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். துருக்கி ஷெட்யூலுக்குப் பிறகு ஸ்டுடியோவில் மட்டுமே தளபதி 68 படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது. இதனால் விஜய் துருக்கியில் இருந்து நேரடியாக ஹைதராபாத் செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், புத்தாண்டு ஸ்பெஷலாக தளபதி 68 அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தளபதி 68 டைட்டில், விஜய் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை ஜனவரி 1ம் தேதி வெளியாகவுள்ளது.

தளபதி 68 படத்தில் விஜய்யுடன் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், நடனப் புயல் பிரபுதேவா, ஜெயராம், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, யோகி பாபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X