Thalapathy 68: “சிம்பு சொன்ன ஒன் லைன்... வெங்கட் பிரபு செய்த மேஜிக்..” தளபதி 68 கதை இதுதானா..?

சென்னை: விஜய் தற்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை, வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

தளபதி 68 படத்தின் கதை குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் கதை சிம்பு சொன்ன ஒன் லைன் தான் என சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

Thalapathy 68: Vijays Thalapathy 68 story is Simbus One-line idea... Venkat Prabhus magic uploading.

தளபதி 68 கதை இதுதானா..?
விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து அவர் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதன் மூலம் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைவது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் இதில், டாப் ஸ்டார் பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். சென்னையில் பூஜையுடன் தொடங்கிய தளபதி 68 ஷூட்டிங், அடுத்து பாங்காங்கில் நடைபெற்றது.

அங்கு விஜய் பங்கேற்ற தரமான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. கார் சேஸிங் சண்டைக் காட்சியான அதில், விஜய் ரிஸ்க் எடுத்து நடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை வைத்து தளபதி 68 ஆக்‌ஷன் ஜானர் படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், தளபதி 68 முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படம் இல்லை என செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

அதாவது, வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கிய போது கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அப்போது தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சியின் பட்ஜெட்டுக்கு பிரச்சினை ஏற்படக் கூடாது என, சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்கலாம் என சிம்பு ஐடியா கொடுத்தாராம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அந்தப் படத்தை, நேரடியாக ஓடிடியில் வெளியிடலாம் எனவும் பேச்சுகள் வந்தன. ஆனால் அதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஓக்கே சொல்லவில்லையாம். அப்போது சிம்பு சொன்ன ஒன் லைன் ஸ்டோரியை தான் விஜய்க்காக செதுக்கியுள்ளாராம் வெங்கட் பிரபு. விஜய்யை சந்தித்த போது வெங்கட் பிரபு முதலில் சிம்புவின் கதையை கூற, தளபதியும் உடனடியாக ஓக்கே சொல்லிவிட்டாராம்.

அதனால் சிம்புவின் கதையை அப்படியே விஜய்க்காக இன்னும் சூப்பராக மாற்றிய வெங்கட் பிரபு, தற்போது தளபதி 68 படமாக இயக்கி வருகிறார். மேலும், இந்தப் படம் ஆக்‌ஷன் மட்டும் இல்லாமல் ஃபேமிலி சென்டிமெண்ட், எமோஷனல் என அனைத்தும் சேர்ந்த பக்கா கமர்சியலாக இருக்கும் எனவும் செய்யாறு பாலு அப்டேட் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X