Thalapathy 68: வாரிசு ஸ்டைலில் தளபதி 68 அப்டேட்... ரசிகர்களே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் இருக்குதாம்!

சென்னை: விஜய்யின் தளபதி 68 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு குறித்து சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

வாரிசு ஸ்டைலில் தளபதி 68 அப்டேட்
விஜய் நடிப்பில் இந்தாண்டு வெளியான வாரிசு, லியோ படங்கள் இரண்டுமே வெவ்வேறு ஜானரில் உருவாகியிருந்தன. வாரிசு ஃபேமிலி ஆடியன்ஸ் படமாகவும், லியோ பக்கா கமர்சியலாகவும் இருந்தது. ஆனாலும், இந்த இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

 Thalapathy 68: Vijays Thalapathy 68 Title and First Look Poster To Be Revealed On December 31

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால், தளபதி 68 படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது எந்த மாதிரியான ஜானரில் எதன் பின்னணியில் உருவாகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாகவே உள்ளது. விஜய்யின் லுக், படத்தின் டைட்டில், என்ன ஜானர் என எதுவுமே இதுவரை வெளியாகவில்லை. ஆனாலும், படப்பிடிப்பு 50% வரை முடிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய், அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ், மாளவிகா ஷர்மா உள்ளிட்ட பலர் தளபதி 68ல் நடிக்கின்றனர். வாரிசு, லியோவை தொடர்ந்து தளபதி 68 படத்திலும் பிரம்மாண்டமான மல்டி ஸ்டார்ஸ் கூட்டணியில் இணைந்துள்ளார் விஜய். மேலும், யுவனின் இசையும் தளபதி 68 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.

இந்நிலையில், தளபதி 68 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய அப்டேட்கள் வெளியாகியுள்ளன. தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகும் என சொல்லப்பட்டது. அதன்படி டிசம்பர் 31ம் தேதி மாலை வெளியாகும் என தகவல்கள் தெரிவித்தன. ஆனால், இப்போது வாரிசு ஸ்டைலில் அடுத்தடுத்து அப்டேட்ஸ் கொடுத்து மாஸ் காட்டவுள்ளதாம் தளபதி 68 டீம்.

அதன்படி, டிசம்பர் 31ம் தேதி மாலை தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு நியூ இயர் ஸ்பெஷலாக இரண்டாவது போஸ்டரை வெளியிடவுள்ளார்களாம். இறுதியாக ஜனவரி 1ம் தேதி மாலை தளபதி 68 டைட்டில் போஸ்டர் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜய் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X