Thalapathy 68: “பான் இந்தியா லெவலில் சக்சஸ் ஆகணும்.. தளபதி 68 டைட்டிலில் செம்ம ட்விஸ்ட்!
சென்னை: விஜய்யின் தளபதி 68 படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை பான் இந்தியா அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் தளபதி 68 டைட்டிலில் செம்ம ட்விஸ்ட் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தளபதி 68 டைட்டிலில் செம்ம ட்விஸ்ட்: விஜய் நடித்து வரும் தளபதி 68 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வாரிசு படத்தில் ஃபேமிலி சென்டிமெண்ட்டுடன் எமோஷனல் செய்த விஜய், லியோவில் ஆக்ஷனில் மிரட்டினார். தற்போது உருவாகும் தளபதி 68, ஆக்ஷன் ப்ளஸ் எமோஷனல் பேக்கேஜ்ஜாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

சிம்புவின் மாநாடு போல சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் டைம் ட்ராவலை பின்னணியாக வைத்து தளபதி 68 உருவாகி வருவதாக சொல்லப்பட்டது. ஆனால், இது சயின்ஸ் பிக்ஷன் படம் இல்லை என்றும், விஜய் ஸ்டைலில் பக்கா கமர்சியல் மூவியாக இருக்கும் எனவும் லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜய் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதும் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
விஜய்யுடன் மைக் மோகன், ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, இவானா, யோகி பாபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் தளபதி 68ல் நடிக்கின்றனர். யுவன் இசையில் தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே ரெடியாகிவிட்ட நிலையில், ஜனவரி 1ம் தேதி ஃபர்ஸ்ட் லுக், படத்தின் டைட்டில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதுபற்றிய அப்டேட்ஸ் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், தளபதி 68 டைட்டிலில் ஒரு ட்விஸ்ட் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தளபதி 68 படத்தை பான் இந்தியா அளவில் சக்சஸ் செய்ய வேண்டும் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனால், 5 மொழிகளுக்கும் ரீச் ஆகும்படி ஆங்கிலத்தில் தளபதி 68 டைட்டில் இருக்க வேண்டும் என விஜய்யும் வெங்கட் பிரபுவும் முடிவு செய்துள்ளார்களாம். அதனால் லியோ போல் தளபதி 68 டைட்டிலும் செம்ம மாஸாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
அதன்படி தளபதி 68 டைட்டில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தளபதி 68 படத்தில் இருந்து விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 31ம் தேதி மாலை வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு நியூ இரண்டாவது போஸ்டரும், இறுதியாக ஜனவரி 1ம் தேதி மாலை மூன்றாவது போஸ்டர் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











