Thalapathy 68: வெங்கட் பிரபு தான்.. ஃபிக்ஸ் பண்ண விஜய்.. தளபதி 68ல் வில்லன் யார் தெரியுமா?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் லியோ படத்தில் நடித்து வரும் நிலையில், வரும் ஜூலையுடன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் ஆரம்பமாக உள்ளன.
இந்நிலையில், அடுத்ததாக தளபதி 68 படத்தை அட்லீ இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெறி இந்தி ரீமேக்கில் அவர் பிசியாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அட்லீ வரும் வரை அடுத்த படத்துக்கு வெயிட் பண்ண முடியாது என நினைத்த விஜய் அதிரடியாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிக்க ஓகே சொல்லிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தளபதி 68 இயக்குநர் வெங்கட் பிரபு தான்: மாநாடு படத்தை பார்த்து மெர்சலான விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு உடன் ஒரு படம் பண்ணலாம் என ஓகே சொல்லி விட்டாராம். மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மன்மத லீலை மற்றும் சமீபத்தில் வெளியான நாக சைதன்யாவின் கஸ்டடி உள்ளிட்ட படங்கள் சொதப்பிய நிலையில், விஜய் வெங்கட் பிரபு உடன் இணைவாரா? மாட்டாரா? என கேள்விகள் வெளியாகி உள்ளன.
ஆனால், நடிகர் விஜய் வெங்கட் பிரபுவின் சமீபத்திய தோல்விகளை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் தனக்காக அவர் வைத்திருக்கும் ஸ்க்ரிப்ட் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார் என்றும் ஏஜிஎஸ் நிறுவனம் வழங்க உள்ள பெரிய சம்பளத்திற்காக நடிக்கப் போகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார்.
200 கோடி சம்பளமா?: இதுவரை எந்த இந்திய சினிமா நடிகர்களுக்கும் வழங்கப்படாத அளவுக்கு 200 கோடி சம்பளம் இந்த படத்தில் விஜய்க்கு வழங்கப்பட உள்ளதாக தனியாக கொளுத்திப் போட்டது பற்றிக் கொண்டு எரிகிறது.
ஆனால், 125 கோடி ரூபாய் தான் இந்த படத்தில் விஜய்யின் சம்பளம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிகில், வாரிசு என 300 கோடி ஹீரோவாக உள்ள நடிகர் விஜய்க்கு இத்தனை கோடி சம்பளம் கொடுப்பது சரிதான் என்றும் கோடம்பாக்கத்தில் பரவலான பேச்சு அடிபட்டு வருகிறது.

வில்லன் இவர் தானா?: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா தான் நடிக்கப் போகிறார் என்கிற பேச்சுக்களும் சினிமா வட்டாரத்தில் ஹெவியாக கிளம்பி உள்ளன.
மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த எஸ்.ஜே. சூர்யா வாரிசு படத்தில் கேமியோவாக நடித்திருந்தார். வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் மிரட்டல் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடித்த நிலையில், விஜய்க்கு வில்லனாக தளபதி 68ல் அவர் தான் நடிக்கப் போகிறார் என்கின்றனர்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மார்க் ஆண்டனி என தொடர்ந்து பல படங்களில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஏஜிஎஸ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்வீட் போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.. அஜித்துக்கு மங்காத்தா, சிம்புவுக்கு மாநாடு படம் கொடுத்தது போல வெங்கட் பிரபு விஜய்க்கும் ஒரு வெறித்தனமான பிளாக்பஸ்டர் படத்தை கொடுப்பார் என தளபதி ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











