Thalapathy 68: நம்பிக்கையுடன் காத்திருந்த ஜீவா... முடிவை மாற்றிய விஜய்... தளபதி 68ல் ‘அந்த’ பிரபலம்

சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

முன்னதாக இந்தப் படத்தின் இயக்குநர் லிஸ்ட்டில் அட்லீ, கார்த்திக் சுப்புராஜ், கோபிசந்த் மலினேனி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.'

 Thalapathy 68: Yuvan will compose the music for Vijay and Venkat Prabhus Thapathy 68 film

மேலும், விஜய்யின் தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், தற்போது தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68ல் விஜய்யுடன் இணையும் பிரபலம்
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டதால், படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து விஜய் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் இயக்குநர் லிஸ்ட்டில் அட்லீ, கார்த்திக் சுப்புராஜ், கோபிசந்த் மலினேனி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் எதிர்பாராத டிவிஸ்ட்டாக யாருமே நினைத்துப் பார்க்காத கூட்டணியில் தளபதி 68 திரைப்படம் உருவாகவுள்ளதாம். அதன்படி, இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. இது சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படமாக உருவாகவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், தற்போது இதுவும் பொய்யாகிவிட்டது. விஜய் - வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். மிகப் பிரம்மாணடமான பட்ஜெட்டில் தயாரிக்கவும் ஏஜிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

 Thalapathy 68: Yuvan will compose the music for Vijay and Venkat Prabhus Thapathy 68 film

இதனால், சூப்பர் குட் பிலிம்ஸ் செளத்ரியின் மகனும் நடிகருமான ஜீவா ஏமாற்றத்தில் உள்ளார். அதேநேரம் தளபதி 69 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதனிடையே விஜய் - வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. வெங்கட் பிரபு படங்களுக்கு யுவன் தான் இசையமைப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.

 Thalapathy 68: Yuvan will compose the music for Vijay and Venkat Prabhus Thapathy 68 film

அதனால், தளபதி 68ல் விஜய் - வெங்கட் பிரபு - யுவன் காம்போ மாஸ் காட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். முன்னதாக விஜய் - யுவன் கூட்டணி புதிய கீதை படத்தில் மட்டுமே இணைந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் இப்போது தான் இக்கூட்டணி இணையவுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் விஜய் - யுவன் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அப்போது விரைவில் இணைவோம் என இருவரும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அது தற்போது தளபதி 68 படத்தில் நிறைவேறவுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X