த்ரிஷா தோத்துடுவாங்க.. பூஜா ஹெக்டே என்னம்மா லிப் கிஸ் அடிக்கிறாரு.. டிரெண்டாகும் 'தேவா' சீன்!
மும்பை: தொடர் தோல்வியை சந்தித்து வந்த நடிகை பூஜா ஹெக்டே இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றியை சாத்தியமாக்குவார் என தெரிகிறது. ஜனவரி மாதம் 31ம் தேதியான இன்று வெளியாகி உள்ள அவரது பாலிவுட் படமான தேவா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும், பூஜா ஹெக்டே மற்றும் ஷாகித் கபூரின் லிப் லாக் முத்தக் காட்சி தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
பூக்களை வைத்து முத்தக் காட்சியை காட்டியதெல்லாம் அந்தக்காலம். லிப் கிஸ் அடிப்பது போல சீட் ஷாட் எல்லாம் இந்த 2025ல் ஓடிடியில் அனைத்து விதமான அடல்ட் படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு காட்டி ஏமாற்ற முடியாது என்பதை இயக்குநர்களும் நடிகர்களும் நன்றாகவே புரிந்துக் கொண்டனர்.

குஷி படத்திலேயே தமிழில் லிப் லாக் முத்தக் காட்சிகள் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், லியோ படம் வரை விஜய் முத்தக் காட்சியில் நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், தளபதி 69 படத்தின் ஹீரோயினான பூஜா ஹெக்டே பாலிவுட் நடிகருடன் வாயோடு வாய் வைத்து அடித்துள்ள லிப் லாக் காட்சி இன்று தியேட்டர்களுக்கு படம் பார்க்கச் சென்றவர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.
ஆரம்பமே வெற்றி: அலா வைகுந்தபுரமுலோ படத்திற்கு பிறகு நடிகை பூஜா ஹெக்டேவுக்கு பல பெரிய பட வாய்ப்புகள் குவிந்தன. பிரபாஸின் ராதே ஷ்யாம், ராம் சரணுடன் ஆச்சார்யா, விஜய்யுடன் பீஸ்ட், சல்மான் கானுடன் கிஸி கா பாய் கிஸி கி ஜான் என அவர் நடித்த 4 பெரிய படங்கள் தோல்வியைத் தழுவின. அதன் காரணமாக மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு ஆரம்பமே ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஷாகித் கபூருடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்த தேவா படம் இன்று வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்திற்கு பயங்கரமான பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு இந்தி படங்கள் பெரும்பாலும் சொதப்பி வந்த நிலையில், பாலிவுட்டுக்கும் நல்ல வெற்றிப் படமாக தேவா மாறும் என தெரிகிறது.

பூஜா ஹெக்டே லிப் லாக்: லியோ படத்தில் விஜய் - த்ரிஷா லிப் லாக் காட்சி ரசிகர்களை கிறங்கடித்தது. சிட்டாடல் வெப்சீரிஸில் வருண் தவான் மடிமீது ஏறி அமர்ந்து சமந்தா கொடுத்த லிப் லாக் முத்தத்தை ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். அந்த வரிசையில் பாலிவுட்டுக்கு சென்றுள்ள நடிகை பூஜா ஹெக்டே நடிகர் ஷாகித் கபூருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து நடித்துள்ள சீனை ரசிகர்கள் தியேட்டரில் இருந்தே வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் தீயாக ஷேர் செய்து வருகின்றனர். இந்த சீனை பார்க்கவே பாலிவுட் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்துவிடுவார்கள் என்றும் கலாய்த்து வருகின்றனர்.
தளபதி 69ல் வாய்ப்பிருப்பா?: இந்த ஆண்டு பூஜா ஹெக்டேவுக்கு பொன்னான ஆண்டு என்று தான் சொல்லவேண்டும். இந்தியில் தேவா படம் ஹிட் அடித்துவிட்டால் அடுத்து தமிழில் சூர்யாவுடன் ரெட்ரோ மற்றும் தளபதி விஜய்யுடன் ஜன நாயகன் என 2 படங்களிலும் அவர் தான் ஹீரோயின். லியோ படத்தில் கடைசியாக லிப் லாக் சீனில் விஜய் நடித்த நிலையில், அவரது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் லிப் லாக் காட்சி பூஜா ஹெக்டேவுடன் இருக்குமா? என்றும் ரசிகர்கள் கேள்வியை எழுப்பி வருகின்றனர். ஆனால், அரசியல் இமேஜுக்காக விஜய் அப்படி நடிக்க மாட்டார் என்றும் தெரிகிறது.



Click it and Unblock the Notifications











