GOAT Box Office: கோட் வசூல் 500 கோடி.. தளபதி 69 வசூல் டபுள் மடங்காகும்.. தனஞ்செயன் பளிச் பேட்டி!
சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் இந்த வாரத்துடன் தமிழ்நாட்டில் மட்டுமே 200 கோடி வசூலை கடக்கும் என தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான கோட் திரைப்படம் 1000 கோடி வசூலை அள்ளுமா? லியோவின் வசூலை வீழ்த்துமா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லியோ வசூலை கோட் திரைப்படம் லாங் ரன்னில் நெருங்கிவிடும் என தனஞ்செயன் கூறியுள்ளார்.
விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்த கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் யங்காகவும் நடுத்தர வயதினராகவும் வயதான தோற்றத்திலும் நடித்து தனது ரசிகர்களுக்கு கம்ப்ளீட் விருந்தை கொடுத்திருந்தார்.

விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ள தளபதி 69 படத்தின் வசூல் கோட் வசூலை விட டபுள் மடங்கு இருக்கும் என தனஞ்செயன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
8000 தியேட்டரில் கங்குவா: உலகம் முழுவதும் சூர்யாவின் கங்குவா படத்தை 8000 திரையரங்குகளிலும் பல்வேறு மொழிகளிலும் 3டி வடிவில் கொண்டு வர ஸ்டூடியோ க்ரீன் பெரும் போராட்டம் நடத்தி வருவதாகவும் கங்குவா திரைப்படம் வெளியானால் அது தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுக்கும் என்றார்.
தமிழ்நாட்டில் 200 கோடி: சமீப காலமாக யாருடைய படம் தமிழ்நாட்டில் மட்டுமே 200 கோடி வசூல் சாதனை எல்லாம் படைக்கிறது. தளபதி விஜய்யின் லியோ படத்தைத் தொடர்ந்து கோட் திரைப்படமும் தமிழ்நாட்டில் மட்டுமே 200 கோடி வசூலை விரைவில் கடக்கும் எனக் கூறியுள்ளார்.
500 கோடி ஹீரோ: லியோ படம் அதிகாரப்பூர்வமாக 540 கோடி வசூல் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதன் பின்னர், அந்த படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது தெரியவில்லை. கோட் திரைப்படம் 13 நாட்களில் 413 கோடி வசூல் என அர்ச்சனா அறிவித்துள்ளார். இந்த வாரமும் கோட் படம் ஓடும். ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் வரை கோட் திரைப்படம் தியேட்டர்களில் ஓடும். கண்டிப்பாக 500 கோடி வசூலை அந்த படம் அள்ளும் என்றார்.
தளபதி 69 வசூல்: கோட் படத்தின் வசூலே இப்படியிருந்தால், தளபதி விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ள தளபதி 69 படத்தின் வசூல் தமிழ்நாட்டில் கோட் படத்தை விட டபுள் மடங்கு இருக்கும். தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூல் என்றால் 1 கோடி பேர் படத்தை பார்த்து இருப்பாங்க. விஜய்யின் கடைசி படம் என்றால் இன்னும் ஒரு கோடி பேர் கூடுதலாக பார்ப்பாங்க.
தீபாவளி சரவெடி: இங்கேயே 400 கோடி அளவு வசூல் வந்தால் ஓவர்சீஸ் வசூல், மற்ற மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வசூல் என நிச்சயம் பெரிய வசூல் வேட்டையை தளபதி 69 படம் பண்ணும். இயக்குநர் எச். வினோத் சென்சிபிளான இயக்குநர் கமர்ஷியல் மட்டுமின்றி கதையும் இருக்கும். விஜய்க்கு கமர்ஷியல் இருந்தாலே படம் ஓடிவிடும். நல்ல கதையும் அமைந்து விட்டால் சொல்லவே தேவையில்லை. அடுத்த ஆண்டு தீபாவளி சரவெடி தான் என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











