பாக்ஸ் ஆபிஸ் சாதனை படங்கள் எல்லாம் நல்ல படங்கள் இல்லை.. தளபதி 69 இயக்குநர் எச். வினோத் நறுக்!

சென்னை: இரா. சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள நந்தன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தளபதி 69 படத்தின் இயக்குநர் எச். வினோத், இசையமைப்பாளர் ஜிப்ரான், இயக்குநர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சுருதி பெரியசாமி இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். நந்தன் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் உயிரைக் கொடுத்து சசிகுமார் நடித்துள்ளதாக பலரும் பாராட்டியுள்ளனர்.

thalapathy 69 h vinoth

நந்தன் படம் பற்றி பேசிய எச். வினோத் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படங்கள் எல்லாம் சிறந்த படங்கள் என்று சொல்லி விட முடியாது என்றும் நல்ல படம் என்றால் எது என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

சதுரங்க வேட்டை முதல் துணிவு வரை: மறைந்த நடிகர் மனோபாலா தயாரிப்பில் வெளியான சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எச். வினோத். முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த வினோத் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்கிற தரமான படத்தையும் கொடுத்தார். அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த அவருக்கு அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என வரிசையாக மூன்று படங்களை எச். வினோத் அஜித்துக்காக இயக்கினார்.

மிஸ் ஆன கமல் படம்: துணிவு படத்திற்கு பிறகு கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை எச். வினோத் இயக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், அந்த படம் கடைசியில் அப்படியே கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்து எச். வினோத் யாரை இயக்குவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தளபதி விஜய்யின் 69-வது படத்தை இவர்தான் இயக்கப் போகிறார் என அறிவித்துள்ளனர்.

நந்தன் இசை வெளியீட்டு விழா: அயோத்தி, கருடன் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் நடிகர் சரத்குமார் இரா. சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள நந்தன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். பிக் பாஸ் ஸ்ருதி ஹீரோயினாக நடித்துள்ளார். சீமான், எச். வினோத் உள்ளிட்ட பிரபலங்கள் இன்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.

எச். வினோத் பேச்சு: பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கலெக்‌ஷன் அள்ளும் படங்கள் எல்லாம் சிறந்த படங்கள் இல்லை என்றும் எது சிறந்த படம் என்றால், எந்தவொரு படம் மக்கள் மத்தியிலும் சமூகத்திலும் ஒரு சின்ன மாற்றத்தையாவது ஏற்படுத்துகிறதோ அதுதான் சிறந்த படம். அந்த வகையில் நந்தன் சிறந்த படமாக மாற்றத்தை ஏற்படுத்தும் என பேசினார். தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுக்கு எதிரான தனது கருத்தை வெளிப்படையாகவே கூறி வருகிறார் எச். வினோத் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 69 அறிவிப்பு: யஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தைத் தயாரித்து வரும் பிரபல கன்னட திரைப்பட நிறுவனமான கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தான் தளபதி விஜய்யின் 69வது படத்தை தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அந்த படத்தின் முதல் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். எச். வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய்யின் கடைசி படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X