Thalapathy 69: விஜய்யின் கடைசி படம்... டைட்டிலுடன் வெளியாகும் தளபதி 69 அப்டேட்... செம்ம மாஸ்!

சென்னை: விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் GOAT இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தார். இதனையடுத்து விஜய்யின் கடைசிப் படம் குறித்தும் அதன் டைட்டில் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் கடைசி பட டைட்டில்
கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். இதுகுறித்து விஜய்யே நேற்று அறிக்கை வெளியிட்டார். கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்த விஜய், இன்னும் ஒரு படத்துடன் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துவிட்டார். விஜய் சினிமாவில் இருந்து விலகுவது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் என்றாலும் அரசியல் வருகை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Thalapathy 69: DVV Entertainments has registered the title Hungry Cheetah for Vijays Thalapathy 69

தற்போது வெங்கட் பிரபு இயக்கும் GOAT படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து ஒரேயொரு மூவியில் மட்டும் கமிட்டாகியுள்ளாராம். அதன்படி இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், இதுகுறித்து இன்னும் அபிஸியல் அப்டேட் வெளியாகவில்லை. அதேநேரம் விஜய்யின் 69வது படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.ஆர்.ஆர் போல பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஆக்‌ஷன் த்ரில்லர் மூவியாக தளபதி 68 படத்தை தயாரிக்க பிளான் செய்யப்பட்டுள்ளதாம். ஆனால், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தானா என்பது மட்டும் இன்னும் கன்ஃபார்ம் ஆகவில்லை. தளபதி 69 ரேஸில் மேலும் இரண்டு இயக்குநர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாம். அதேபோல் தளபதி 69 படத்திற்கான டைட்டிலை DVV எண்டர்டெயின்மெண்ட் பதிவு செய்துவிட்டதாம்.

இந்த டைட்டில் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு வலு சேர்க்கும் விதத்தில் தரமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதன்படி 'சிறுத்தை' என முடியும் படி செம்ம மாஸ்ஸான டைட்டிலில் தளபதி 69 உருவாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தளபதி 69 டைட்டிலுடன் அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், இந்தப் படம் அடுத்தாண்டு அதாவது 2025 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின்னர் முழுக்க முழுக்க அரசியலில் களமிறங்கவுள்ள விஜய், 2026 தேர்தலில் போட்டியிடவுள்ளார். இன்னும் ஒரு படத்தில் மட்டுமே விஜய் நடிக்கவுள்ளதால் பீஸ்ட் 2, லியோ 2 ஆகியவை கேள்விக்குறியாகியுள்ளது. அதேநேரம் அரசியலில் விஜய்க்கு வெற்றி கிடைக்கவில்லை என்றால், அவர் சினிமாவில் மீண்டும் நடிப்பாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X