Thalapathy 69 Cast: தளபதி 69ல் இந்த 4 பேர் கன்ஃபார்மா?.. கசிந்த டாப் சீக்ரெட்.. சமந்தா இல்லையா?

சென்னை: தளபதி 69 படத்தின் அப்டேட்களை கேட்க விஜய் ரசிகர்களே இன்னமும் தயார் ஆகாத நிலையில், அடுத்தடுத்து அப்டேட்களை அடுக்கி கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தளபதி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வெளியாகின.

அதன் பின்னர் அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி உருவாகி இன்னமும் ரிலீஸ் தேதிக்கூட அறிவிக்காத நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ, வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என அடுத்தடுத்து தளபதி விஜய் சம்பவம் செய்துவிட்டு தற்போது தளபதி 69 படத்தின் வேலைகளிலும் பிசியாகி விட்டார்.

thalapathy 69 vijay bobby deol 69

இந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ள நிலையில், அந்த மாநாடு முடிந்தவுடனே தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து விடும் என தெரிகிறது.

டாக்ஸிக் முதல் தளபதி 69 வரை: கன்னட திரையுலகம் கேஜிஎஃப் மற்றும் காந்தாரா படங்களுக்குப் பிறகு மிகப்பெரிய மார்க்கெட் வளர்ச்சியை கண்டுள்ளது. கன்னட திரையுலகை தாண்டியும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தனது தயாரிப்பு பணிகளை மற்ற மாநிலங்களுக்கும் தற்போது விரிவுப்படுத்தி வருகிறது. யஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தை தயாரித்து வரும் அந்த நிறுவனம் அடுத்து தளபதி 69 படம் மற்றும் பிரியதர்ஷன் அக்‌ஷய் குமார் இணையும் ஒரு பாலிவுட் படம் உள்ளிட்டவற்றையும் தயாரிக்கப் போகிறது.

thalapathy 69 vijay bobby deol 69

தளபதி 69 இயக்குநர்: நடிகர் விஜய்யின் கடைசி படத்தை வெற்றிமாறன் இயக்குவாரா? ஆர்.ஜே. பாலாஜி இயக்குவாரா? அட்லீ இயக்குவாரா? என ஏகப்பட்ட பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், இறுதியாக கேவிஎன் தயாரிப்பில் ஹெச். வினோத் தான் தளபதி 69 படத்தை இயக்கப் போகிறார். அனிருத் தான் இசையமைப்பாளர் என்பதை உறுதி செய்து சில நாட்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில், அதன் அடுத்த அப்டேட் இன்று மாலை வெளியாகிறது.

இந்த 4 பேரும் கன்ஃபார்ம்?: அனிமல் படத்தில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பிய பாபி தியோல் தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்துள்ள நிலையில், தளபதி 69 படத்திலும் அவர் தான் வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாரிசு படத்தைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய்யுடன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரேமலு படத்தின் ஹீரோயின் மமிதா பைஜு மற்றும் மஞ்சு வாரியர் இந்த படத்தில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இன்று மாலை முதல் அடுத்தடுத்த நாட்களில் இவர்கள் குறித்த அப்டேட்கள் தான் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

thalapathy 69 vijay bobby deol 69

சமந்தா, சிம்ரன் இல்லை: முன்னதாக தளபதி 69 படத்தில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், திடீரென அவர் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் விஜய் படத்தில் சிம்ரன் இணையவில்லை என்பது உறுதியானது. மேலும், நடிகை சமந்தா தளபதி 69 படத்திலும் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் பாலிவுட்டில் பெரிய படத்தை குறி வைத்துக் காத்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X