Thalapathy 69: இந்தமுறை விஜய் மிஸ்ஸாக வாய்ப்பே இல்ல... தளபதி 69 இயக்குநர் இவர் தானா..?

சென்னை: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் தளபதி 69 இயக்குநர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் தளபதி 69 இயக்குநர்
கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்தாண்டு மட்டும் வாரிசு, லியோ என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது தளபதி 68 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 Thalapathy 69: Karthik Subbaraj will direct Vijays Thalapathy 69

தளபதி 68 படத்தின் மொத்த படப்பிடிப்பும் அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களுக்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. அதனால் இப்போது முதலே தனது அடுத்தப் படம் குறித்து ஆர்வம் காட்டி வருகிறார் விஜய். அதாவது தளபதி 69 படத்திற்கான கதை கேட்டு வந்த விஜய், தற்போது இயக்குநர் யார் என்பதையும் முடிவு செய்துவிட்டாராம். அனைவருமே தளபதி 69 படத்தை அட்லீ இயக்குவார் என எதிர்பார்த்தனர்.

ஆனால், அட்லீக்குப் பதிலாக கார்த்திக் சுப்புராஜ் தான் தளபதி 69 படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு தீபாவளிக்கு கார்த்திக் சுப்புராஜ்ஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகியிருந்தது. எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அப்போதே விஜய்யிடம் ஒரு கதை சொல்லியிருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்தார்.

அதன்படி கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்த கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும், அதனால் அவர் தளபதி 69 படத்துக்கு ஓக்கே என க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. பீஸ்ட் படத்துக்குப் பின்னர் விஜய் - சன் பிக்சர்ஸ் கூட்டணி பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

முக்கியமாக ஜவான் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் விஜய் குறித்து அட்லீ பேசியது, சன் டிவியில் எடிட் செய்து டெலிகாஸ்ட் ஆனது. இதனால் இனி சன் பிக்சர்ஸ் பேனரில் விஜய் நடிக்க மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்றும், தளபதி 69 படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய் - கார்த்திக் சுப்புராஜ் - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் தளபதி 69 உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X