சிம்பிளாக நடந்த தளபதி 69 பட பூஜை.. அனிருத், பிரகாஷ் ராஜ் என எல்லோரும் மிஸ்ஸிங்!

சென்னை: அரசியல் கட்சியை தொடங்கி உள்ள தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக தளபதி 69 படம் உள்ளது. இப்படத்தின் அப்டேட்டுகளை படக்குழு ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வரும் நிலையில் படத்தின் பூஜை இன்று தடபுடலாக நடந்துள்ளது. அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மாஸ் ஹீரோ வசூல் மன்னன் என பெயர் எடுத்த நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அறிக்கை வெளியிட்டார்.அதில், ஒப்புக்கொண்ட படப்பணிகளை முடித்து விட்டு படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு, முழுவதுமாக அரசியலில் இறங்குவதாக அறிவித்திருந்தார். விஜய் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சியான செய்தியாக இருந்த போதும், அவர் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

thalapathy 69 vijay pooja hegde

கோட் வசூல்: அதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்தார். அப்பா, மகன் என இரண்டுவிதமான ரோலில் விஜய் நடித்து அசத்தி இருந்தார். குறிப்பாக மகன் ரோலில் அதிரடி வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருந்தார் விஜய். மேலும், இப்படத்தில் விஜய்யுடன் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், பிரேம்ஜி, யோகி பாபு என பலர் நடித்திருந்தனர். இப்படம் செப்டம்பர் 5ந் தேதி தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடியை வசூலாக அள்ளிய இத்திரைப்படம உலக அளவில் 440 கோடி வசூலை அள்ளியது.

thalapathy 69 vijay pooja hegde

தளபதி 69: இதையடுத்து, தளபதி 69 படத்தின் அடுத்த படத்திற்கான அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி, KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 69 படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இவர், கடைசியாக அஜித்தின் துணிவு படத்தினை இயக்கி இருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலை அள்ளியது. இப்படத்தில், பாபி தியோல், பூஜா ஹேக்டே, மமிதா பைஜூ, கெளதம் வாசுதேவ் மேனன், ப்ரியாமணி உள்ளிட்டோர் கமிட்டாகி உள்ளனர். மேலும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

thalapathy 69 vijay pooja hegde

மிஸ்ஸிங்: இந்நிலையில், இன்று தளபதி 69 திரைப்படத்திற்காக தளபதி 69 படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பூஜா ஹெக்டே, எச் வினோத் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் போட்டோ இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.ஆனால், தளபதி 69 லிட் ரோலில் நடிக்கும் பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி, நரேன், மமிதா பைஜூ, அனிருத் என எந்த பிரபலமும் கலந்து கொள்ளாமல் மிகவும் எளிமையாக நடந்து முடிந்தது. இன்றைய தினம் தளபதி 69 படத்தின் பூஜை போடப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பிரம்மாண்ட செட்டில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

thalapathy 69 vijay pooja hegde

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X