Thalapathy 69: அச்சச்சோ.. இப்படி ஆகிப்போச்சே.. தளபதி 69 இந்த வருஷம் வராதா?.. டென்ஷனான விஜய் ஃபேன்ஸ்!
சென்னை: இந்த 2025ம் ஆண்டு அஜித் குமாரின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அடுத்தடுத்து 2 படங்கள் வெளியாக உள்ள நிலையில், விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படமும் தீபாவளியை டார்கெட் செய்து வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென விஜய் ரசிகர்களுக்கு இடியாக ஒரு செய்தி வந்து இறங்கியிருக்கிறது.
ரஜினிகாந்தின் கூலி, கமல்ஹாசனின் தக் லைஃப், அஜித் குமாரின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, சூர்யாவின் ரெட்ரோ, விக்ரமின் வீர தீர சூரன், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் இந்த ஆண்டு வரிசைக் கட்டி வெளியாக காத்திருக்கின்றன.

இந்நிலையில், அடுத்த ஆண்டு தான் தளபதி 69 படம் வெளியாகும் என பரவி வரும் தகவலால் தளபதி ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகி சோஷியல் மீடியாவில் தங்களின் ஆதங்கங்களை கொட்டி வருகின்றனர். தளபதி 69 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது? எதனால் அடுத்த ஆண்டு அந்த படம் தள்ளிப் போகிறது என்பது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
2026 பொங்கல் ரிலீஸ்: இந்த ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தளபதி 69 திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு திடீரென எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு நடிப்பில் உருவாகி வரும் தளபதி 69 படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் தான் வரும் என்கிற தகவல்கள் பரவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுதான் டைட்டிலா?: தளபதி 69 திரைப்படத்திற்கு நாளைய தீர்ப்பு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரவி வருகின்றன. கூடிய விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்துவிடும். படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்துடன் முடிந்து இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியில் இப்படியொரு அறிவிப்பு வருவதற்கு பின்னணியில் என்ன காரணம் உள்ளது என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
விஜய்யின் அரசியல் ஆர்வம்: தளபதி 69 படத்தின் படப்பிடிப்பையே கொஞ்ச மாதங்களுக்கு நிறுத்தி வைத்துவிட்டு நடிகர் விஜய் தீவிர அரசியல் களத்தில் இறங்கப் போகிறார் என்றும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகப் போவதாக பரவி வரும் தகவல்களுக்கும் அதுதான் முக்கிய காரணம் என்கின்றனர். ஆனால், இதுவரை தளபதி 69 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கேவிஎன் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திரைக்கதையில் மாற்றம்: தளபதி 69 படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்கிற தகவல்கள் பரவி வரும் நிலையில், அப்படியே படம் வந்தால் சரியாக போகுமா? போகாதா? என்கிற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், திரைக்கதையில் முக்கிய மாற்றத்தையும் செய்யப் போவதாகவும் அதற்காகவே கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும் இன்னும் சில தகவல்களும் உலா வருகின்றன.


Click it and Unblock the Notifications











