Thalapathy 69: ”அடுத்தடுத்து தோல்வி... பிரம்மாண்டத்தின் உச்சமாக தளபதி 69..”விஜய் அதிரடி முடிவு!
சென்னை: விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த வாரம் 19ம் தேதி வெளியானது.
இந்தப் படம் முதல் வாரத்தில் 461 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது.
லியோவை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இதனையடுத்து தளபதி 69 படத்தின் இயக்குநர் யார் என விஜய் முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் தளபதி 69 இயக்குநர்: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ கடந்த வாரம் ரிலீஸானது. முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்த லியோவுக்கு, விமர்சன ரீதியாக நெகட்டிவான வரவேற்பை தான் பெற்றது. இருப்பினும் ஒரு வாரத்தில் 461 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இதனையடுத்து தளபதி 68 படத்தில் பிஸியாகிவிட்ட விஜய், தற்போது அதன் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன்னர் தளபதி 68 பூஜை வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்தப் படத்தில் விஜய்யுடன் வெள்ளிவிழா நாயகன் மைக் மோகன், டாப்ஸ்டார் பிரசாந்த், டான்ஸ் கிங் பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, அஜ்மல் உள்ளிட்ட பலர் கமிட்டாகியுள்ளனர்.
லியோவைத் தொடர்ந்து தளபதி 68ம் மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், பீஸ்ட், வாரிசு, லியோ என மூன்று படங்களுமே விஜய்க்கு விமர்சன ரீதியாக நெகட்டிவ் ரெஸ்பான்ஸ் மட்டுமே கொடுத்துள்ளது. அதேநேரம், வசூல் ரீதியாக விஜய் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாஸ் காட்டி வருகிறார். எனவே தளபதி 68 விஜய்க்கு மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது.
இதன் காரணமாக தனது அடுத்த படத்தின் இயக்குநர் குறித்தும் விஜய் தீவிர ஆலோசனையில் இருந்தார். இறுதியாக தளபதி 69 படத்தில் ஷங்கருடன் இணைய முடிவு செய்துள்ளாராம். நண்பன் படத்துக்குப் பின்னர் விஜய் - ஷங்கர் காம்போ தளபதி 69ல் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்காக நண்பன் உருவானது. ஆனால், இந்த முறை விஜய்க்காக தரமான ஸ்க்ரிப்ட் ரெடி செய்துள்ளாராம் ஷங்கர்.
அதன்படி, தளபதி 69 பொலிட்டிக்கல் ஜானரில் இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷங்கரின் படங்கள் என்றாலே பிரம்மாண்டமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தளபதி 69 பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும் எனவும், இந்தப் படத்தை கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாக கொடுக்க வேண்டும் என்றும் விஜய் முடிவு செய்துள்ளாராம். இதுபற்றிய அப்டேட் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











