Thalapathy 70: விஜய் எடுத்த அவசர முடிவு... அடுத்து அரசியல் தான்... தளபதி 70 இயக்குநரும் ரெடி..!

சென்னை: விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து தளபதி 69, தளபதி 70 படங்களை ஒரே நேரத்தில் தொடங்க விஜய் முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இரண்டு படங்களுக்கும் இயக்குநர்கள் யார் என்பதையும் விஜய் முடிவு செய்துவிட்டாராம்.

விஜய்யின் தளபதி 70 இயக்குநர்: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் விரைவில் அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தளபதி ரசிகர்கள் அரசியலில் களமிறங்கிவிட்டனர். அடுத்தாண்டு நடைபெறும் நாடளுமன்ற தேர்தலில் விஜய் வாய்ஸ் அவுட் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நடிப்பில் பிஸியாக இருக்கிறார் விஜய்.

 Thalapathy 69: Shankar or Atlee will direct Vijays Thalapathy 70

இந்தாண்டு மட்டும் வாரிசு, லியோ என இரண்டு படங்கள் விஜய் நடிப்பில் வெளியாகின. அதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். விஜய்யுடன் மிகப் பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்து வருகிறது. அசுர வேகத்தில் நடைபெற்று வரும் தளபதி 68 ஷூட்டிங், அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

அதனால் இப்போதே தனது அடுத்த படத்துக்கான இயக்குநர் யார் என்பதை விஜய் முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கலாம் எனத் தெரிகிறது. நீண்ட நாட்களாக விஜய்யை சந்தித்து கதை சொல்லி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். அவரது இயக்கத்தில் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் சூப்பர் ஹிட் ஆனது.

 Thalapathy 69: Shankar or Atlee will direct Vijays Thalapathy 70

எனவே தளபதி 69 பட இயக்குநராக கார்த்திக் சுப்புராஜ்ஜை டிக் செய்துள்ளாராம் விஜய். இது பக்கா கமர்சியல் ஜானரில் ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தளபதி 69 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்னொரு பக்கம் தளபதி 70 படம் குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி இந்தப் படத்தின் இயக்குநர் லிஸ்ட்டில் ஷங்கர், அட்லீ இருவரையும் செலக்ட் செய்துள்ளாராம் விஜய்.

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதால், அதனை மனதில் வைத்து தரமான பொலிட்டிக்கல் ஜானர் கதையில் விஜய் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இயக்குநர் ஷங்கரும் அதற்கேற்ப ஒரு கதை கூறியுள்ளாராம். அதனால் விஜய்யும் ஷங்கர் இயக்கத்தில் ரெடியாகிவிட்டதாக தெரிகிறது. ஒருவேளை இக்கூட்டணி ட்ராப் ஆனால், தனது செல்ல தம்பி அட்லீ இயக்கத்தில் நடிக்க பிளான் செய்துள்ளாராம் விஜய். அதேபோல், தளபதி 69 ஷூட்டிங் தொடங்கியதுமே தளபதி 70 படம் பற்றிய அப்டேட்டும் வெளியாகும் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X