Thalapathy 69: தளபதி 69 இயக்குநர் லிஸ்ட்டில் அடுத்த பிரபலம்... சம்பளத்தை மேலும் உயர்த்திய விஜய்!
சென்னை: விஜய் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துவிட்டார். இதனால் சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ள விஜய்க்கு, தளபதி 69 அல்லது தளபதி 70 தான் கடைசி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய்யை இளம் இயக்குநர் ஒருவர் நேரில் சந்தித்து கதை கூறியுள்ளார். எனவே தளபதி 69 இயக்குநர் யார் என்பதில் தொடர்ந்து சர்ப்ரைஸ் காணப்படுகிறது.
தளபதி 69 இயக்குநர் லிஸ்ட்டில் அடுத்த பிரபலம்
விஜய்யின் தளபதி 69 இயக்குநர் யார் என்பது தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ரேஸில் விஜய் தான் முதலிடத்தில் இருக்கிறார். விஜய் படங்கள் எப்படியும் 200 முதல் 300 கோடி ரூபாய் வசூலை எளிதாக கடந்துவிடுகின்றன. இதனால் அவரது படங்களுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகிலும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் விஜய் திடீரென அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தது திரையுலகில் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. சினிமாவில் இருந்து விலகி அரசியலில் பயணிக்கவிருப்பதால், இன்னும் ஓரிரு படங்களில் மட்டுமே நடிக்கவுள்ளார் விஜய். அதன்படி தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தளபதி 69 படத்தில் நடிப்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.
இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முக்கியமாக தளபதி 69 இயக்குநர் யார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ், நெல்சன், அட்லீ, ஹெச் வினோத் என தொடர்ந்த இந்த குழப்பம் தற்போது வெற்றிமாறனா அல்லது த்ரிவிக்ரமா என வந்து நிற்கிறது. ஆனால் தளபதி 69 திரைப்படத்தை DVV என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவிருப்பது மட்டும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது.
ஆர்.ஆர்.ஆர் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்த DVV என்டர்டெயின்மெண்ட், தற்போது விஜய்யின் தளபதி 69-ல் இன்னும் தரமான சம்பவம் செய்ய ரெடியாகியுள்ளது. தளபதி 69 விஜய் 250 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு DVV என்டர்டெயின்மெண்ட் சம்மதம் தெரிவித்துவிட்டதாம். ஆனால், இயக்குநர் யார் என்பதில் தான் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. வெற்றிமாறன், த்ரிவிக்ரம் இருவரும் தான் விஜய்யின் ஃபைனல் லிஸ்ட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சைரன் பட இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் விஜய்யை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படம் கடந்த வாரம் 9ம் தேதி ரிலீஸானது. இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் கிடைத்துள்ள நிலையில், விஜய்யை சந்தித்த ஆண்டணி பாக்யராஜ் அவருக்காக ஒரு கதை கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது தளபதி 69 படத்திற்கான சந்திப்பு தானா என்பது இதுவரை உறுதியாகவில்லை.
அதேநேரம் விஜய்யின் கடைசி படமாக தளபதி 70 தான் வெளியாகும் எனவும், அதற்கான கதையை தான் ஆண்டனி பாக்யராஜ் விஜய்யை சந்தித்து சொன்னதாகவும் தெரிகிறது. இதனால் விஜய் ரசிகர்களிடம் தளபதி 69, தளபதி 70 பற்றிய அபிஸியல் அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர். தளபதி 69 இயக்குநர் யாராக இருந்தாலும் கோட் படப்பிடிப்புக்குப் பின்னர் தான் அபிஸியலாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











