தளபதி 69 கதையே மாறிடுச்சாம்.. பாலைய்யா படமும் இல்லை.. கமலுக்கு சொன்ன கதையும் இல்லையாம்?
சென்னை: தளபதி விஜய்யின் கடைசி படமாக தளபதி 69 படம் உருவாகி வருகிறது. சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான எச். வினோத் நடிகர் அஜித் குமாரை வைத்து மூன்று படங்களை இயக்கிய நிலையில், தற்போது விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தை இயக்கி வருகிறார்.
கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. சமீபத்தில் தளபதி 69 படத்திற்கான பூஜை போடப்பட்டது.

தளபதி 69 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பிரபலங்கள் அந்த படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் அந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். கமலுக்கு சொன்ன கதையில் விஜய் நடிக்கப் போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது தளபதி 69 படத்தின் கதையே வேறு என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலய்யா படம் கிடையாது: விஜய் நடித்து வரும் தளபதி 69 திரைப்படம் டோலிவுட் நடிகர் பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என வதந்திகள் கிளம்பின. ஆனால், அந்த படத்தின் ரீமேக் கிடையாது என உறுதியான தகவல்கள் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ளன.
கமலுக்கு சொன்ன கதையா?: எச். வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக ஒரு படம் அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அந்த படத்தின் கதையைத் தான் விஜய்க்கு சொல்லி எச். வினோத் இயக்கி வருகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், அதுவும் கிடையாது என்றும் இது முற்றிலும் விஜய்க்கான படம் என்றும் இந்த படத்தில் அரசியல் இருந்தாலும் இது அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடக்கூடிய படமாக இருக்க வேண்டும் என விஜய் போட்ட கண்டிஷனுக்கு ஓகே சொல்லி அதற்காக கதையை உருவாக்கி வினோத் எடுத்து வருகிறார் எனக் கூறுகின்றனர்.
அடுத்த ஆண்டு தீபாவளிக்கு: இந்த ஆண்டு விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளது. கோட் படத்தின் 455 கோடி வசூலை இந்த ஆண்டு எந்த படமும் பீட் பண்ணுமா என்பது கேள்விக்குறி தான். இந்நிலையில், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் கடைசி படமாக தளபதி 69 படம் வெளியாக உள்ளது. விஜய் படத்துக்குப் போட்டியாக எந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வரும் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











