Thalapathy 69: மீண்டும் பீஸ்ட் கூட்டணி... விஜய், நெல்சன், சன் பிக்சர்ஸ் காம்போவில் தளபதி 69
சென்னை: விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.
இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68ல் நடித்து வருகிறார் விஜய்.

தளபதி 68 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய்யின் அடுத்தப் படம் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி, விஜய் மீண்டும் பீஸ்ட் கூட்டணியில் இணையவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தளபதி 69-ல் இணையும் பீஸ்ட் கூட்டணி
கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் தற்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக விஜய் நடித்த லியோ, கடந்த மாதம் வெளியாகி 600 கோடி வரை வசூலித்தது. இந்தப் படம் வெளியாகும் முன்னரே தளபதி 68 ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார் விஜய். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
விஜய்யுடன் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தளபதி 68 ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், தனது அடுத்தப் படத்தின் இயக்குநரை டிக் செய்வதில் விஜய் கவனம் செலுத்தி வருகிறாராம். விஜய்யின் கால்ஷீட்டுக்காக இளம் இயக்குநர்கள் பலர் காத்திருக்கின்றனர். சமீபத்தில் கூட விஜய்க்கு கதை ரெடியாக இருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்தார்.
அதேபோல், அட்லீ, நெல்சன் உட்பட மேலும் சிலர் விஜய்க்கு கதையுடன் காத்திருக்கின்றனர். இயக்குநர் அட்லீ, விஜய் - ஷாருக்கான் இருவரும் சேர்ந்து நடிக்கும் வகையில் ஒரு கதையை எழுதி வருகிறாராம். இந்நிலையில் விஜய் மீண்டும் நெல்சனுக்கே க்ரீன் சிக்ன்ல கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. கடந்தாண்டு வெளியான விஜய்யின் பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. அதேபோல் கதை, திரைக்கதை ஆகியவை சொதப்பிவிட்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். ஆனால், பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து ரஜினியுடன் இணைந்த நெல்சன், ஜெயிலர் திரைப்படத்தை ஹிட்டாக்கி பதிலடி கொடுத்தார். சூப்பர் ஸ்டார் - நெல்சன் காம்போவில் வெளியான ஜெயிலர், 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்நிலையில், விஜய்யின் தளபதி 69 படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. முக்கியமாக இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாம். ஜெயிலர் வெளியான போது விஜய்க்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் இடையே சில மன வருத்தங்கள் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தளபதி 69 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தளபதி 68 படத்தின் டைட்டில், ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியானதும், தளபதி 69 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











