Thalapathy 69: இயக்குநருடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை... இன்னும் ஒரே மாதத்தில் தளபதி 69 அப்டேட்!

சென்னை: விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். 2026 தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள விஜய், இன்னும் ஓரிரு படங்களில் மட்டுமே நடிக்கவுள்ளார். அதன்படி விஜய்யின் தளபதி 69 இயக்குநர் குறித்தும் அந்தப் படம் பற்றியும் விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகவுள்ளது.

இன்னும் ஒரே மாதத்தில் அப்டேட்: ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படும் விஜய் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். இதுகுறித்து கடந்த வாரம் அறிக்கை வெளியிட்ட விஜய், இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை எனவும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிடவிருப்பதாகவும் அறிவித்திருந்தார். இதனால் விஜய்யின் கடைசிப் படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

 Thalapathy 69: Thalapathy 69 director will be announced in a month

அரசியல் பயணம் குறித்து அறிவிக்கும் முன்னர் விஜய்யின் தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், விஜய் அரசியலில் களமிறங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்தே தளபதி 69 இயக்குநர் யாராக இருக்கும் என்பது ரசிகர்களுக்கு அதிக ஹைப் கொடுத்துள்ளது. இந்த லிஸ்ட்டில் கார்த்திக் சுப்புராஜ் மட்டும் இல்லாமல் ஹெச் வினோத், வெற்றிமாறன், அட்லீ, வம்சி பைடிபள்ளி, லோகேஷ் கனகராஜ் என பலரது பெயர்களும் அடிபடுகின்றன.

ஆனாலும் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், ஹெச் வினோத் இந்த மூவரில் ஒருவர் தான் தளபதி 69 இயக்குநராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்களில் கூட இயக்குநர் வெற்றிமாறன் தான் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், தளபதி 69 படத்தின் இயக்குநர் யார் என்பதை தீர்மானிக்கும் கடைசிக் கட்ட பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். இன்னும் ஓரிரு வாரங்களில் இது முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மார்ச் இறுதிக்குள் தளபதி 69 இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட அனைத்து அப்டேட்களையும் வெளியிட விஜய் தரப்பு ரெடியாகிவிட்டதாம். அதேபோல் கோட் படத்தின் ஷூட்டிங் இதுவரை 60% முடிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்ட கோட், தீபாவளிக்கு ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 69 படத்தை வெற்றிமாறன் இயக்கினால், அது கோட்டா நீலிமா என்பவர் எழுதிய 'ஷூஸ் ஆஃப் தி டெட்' நாவலை தழுவி எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. விவசாயிகளின் தற்கொலையை பின்னணியாக வைத்து பொலிட்டிக்கல் ஜானரில் இந்த மூவி இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இன்னும் ஒரு மாதத்திற்குள் அபிஸியல் அப்டேட் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X