மணிகண்டன் தளபதி 69 படத்தை இயக்கப் போறாரா? விஜய் கொடுத்த சூப்பர் ஆஃபர்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜய்யின் கடைசிப் படமான தளபதி 69 இயக்குநர் பற்றிய எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் குட் நைட் பட நடிகர் மணிகண்டன் விஜய் கதை சொன்னதாக கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

உச்ச நடிகரான விஜய், தனது தந்தை எஸ் ஏ சந்திர சேகர் மூலம் சினிமா வந்தாலும், தனது முயற்சியால் தொடர்ந்து சினிமாவில் நம்பர் நடிகராகவே இருக்கிறார். ஆரம்பத்தில மென்மையான கதாநாயகனாக நடித்து வந்த விஜய், பின் மாஸ் ஹீரோ கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த மாஸ் நடிகராக மாறிவிட்டார். இவரின் படங்கள் பாக்ஸ் ஆபிசில் ரூ200 கோடியை அசால்ட்டாக பெற்றுவிடும்.

Thalapathy 69 update who is going to direct vijay s last film

நடிகர் விஜய்: நடிகர் தலைவா படத்தில் நடித்த போதே அவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து வெளியான சர்க்கார் படத்திலும் ஓட்டு பற்றியும் ஓட்டின் முக்கியத்துவம் பற்றியும் பேசி அரசியலுக்கு நான் ரெடி சிக்கல் கொடுத்திருந்தார். இதையடுத்து, கடந்த மாதம் தமிழக் வெற்றிக்கழம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். 2026ம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க இருப்பதாகவும், அரசியலில் ஈடுபட உள்ளதால், சினிமாவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்: விஜய் சினிமாவை விட்டு விலகும் முடிவு செய்து இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தற்போது அவர், வெட்கட்பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அப்பா மகன் என இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் கேரளாவில் நடைபெற்ற நிலையில், கிளைமாக்ஸ் காட்சிக்காக விஜய் நேற்று துபாய் புறப்பட்டு சென்றார். இப்படம் ஆகஸ்ட் மாதம் அல்லது அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 69 இயக்குநர் யார்: இந்த படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் தான் அவரது கடைசி படம் என்பதால், இந்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. முதலில் கார்த்திக் சுப்புராஜ் தான் தளபதி 69 இயக்குநர் என தகவல் வெளியானது. ஆனால் அவரோ சூர்யாவுடன் கமிட்டாகிவிட்டார். அதேபோல், வெற்றிமாறன், அட்லீ, ஷங்கர், நெல்சன், லோகேஷ், டோலிவுட் முன்னணி இயக்குநர்களின் பலரது பெயர்கள் லிஸ்ட்டில் இருந்தன.

விஜய் கொடுத்த வாய்ப்பு: ஆனால் தற்போதைய நிலவரப்படி, குட் நைட் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த மணிகண்டனிடம் விஜய் கதை கேட்டதாக கூறப்படுகிறது. மணிகண்டன் விஜய்யின் அப்பாயிண்ட்மென்ட்டை பெற்று ஒரு மணி நேரம் கதை கூறியதாக தெரிகிறது. மணிகண்டன் கூறிய கதையை மிகவும் பொறுமையாக கேட்ட விஜய், கதை நன்றாக இருக்கு, ஆனால், இளம் நடிகர்கள் யாராவது நடித்த நன்றாக இருக்கும், அரசியலில் கட்சி தொடங்கி இருக்கும் சூழ்நிலையில் எனக்கு இது செட்டாகாது, தன்னைவிட இளம் நடிகர் நடித்தால் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று விஜய் மணிகண்டனுக்கு அட்வைஸ் கொடுத்தாகவும் கூறப்படுகிறது. இதனால், மணிகண்டன் இந்த கதையில் தானே நடிக்கலாம் முடிவி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கூடிய விரைவில் மணிகண்டனை ஒரு இயக்குநர் அவதாரம் எடுப்பது உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X