Thalapathy 69: விஜய்யுடன் இணையும் வெற்றிமாறன்... நாவலில் இருந்து உருவாகும் தளபதி 69... கதை இதுதானா?

சென்னை: விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால் சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதனால் ஏற்கனவே கமிட்டான படங்கள் தவிர வேறு எதிலும் நடிக்கப் போவதில்லை என தெரிவித்துவிட்டார். இந்நிலையில் விஜய்யின் தளபதி 69 படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாகவும், அதன் கதை குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி 69 ஒன்லைன் ஸ்டோரி
கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய், இனி அரசியல் தலைவராக வலம் வரவுள்ளார். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், அரசியலுக்காக சினிமாவில் இருந்தும் விலகுகிறார். இதனையடுத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் தவிர மேலும் ஒரேயொரு படத்தில் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளாராம் விஜய். இந்தப் படம் குறித்த தகவல்கள் வெளியாகி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

 Thalapathy 69: Vetrimaran is directing Vijays Thalapathy 69 based on the Shoes of the Dead novel

தளபதி 69 படத்தின் இயக்குநர்கள் லிஸ்ட்டில் பலரது பெயர்கள் அடிப்பட்டன. இறுதியாக இதில் வெற்றிமாறன் தான் தளபதி 69 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விடுதலை 2ம் பாகம் இயக்கி வரும் வெற்றிமாறன், ஏற்கனவே விஜய்யிடம் ஒரு கதை கூறியிருந்தாராம். அதுதான் தற்போது தளபதி 69 மூவியாக உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலின் படி புகழ்பெற்ற நாவலை அடிப்படையாக வைத்து தளபதி 69 உருவாகவுள்ளதாம்.

கோட்டா நீலிமா என்பவர் எழுதிய நாவல் 'ஷூஸ் ஆஃப் தி டெட்.' அரசியல் நாவலான இது உண்மைக் கதையை தழுவி எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கதையில் கோவிந்த், கோபிநாத் என்ற இரண்டு சகோதர்கள், மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களில் கோவிந்த் டெல்லியில் பிரபலமான வழக்கறிஞராக பணிபுரிகிறார். கோபிநாத் சொந்த ஊரிலேயே விவசாயம் செய்து பிழைப்பு நடத்துகிறார்.

இவர்களில் கோபிநாத் விவசாயம் செய்ய முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார். இதனையடுத்து தனது சகோதரனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்துகிறார் கோவிந்த். அரசியல், ஊழல், லஞ்சம், விவசாயத்துக்கு எதிரான அரசின் அலட்சியங்கள் என சீன் பை சீன் பக்கா பொலிட்டிக்கல் ஜானர் கதையில் தளபதி 69 உருவாகவுள்ளதாம்.

இந்த நாவல் விவசாயிகளின் துயரங்களையும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் நிர்வாக தோல்விகளையும் தோலூரித்துக் காட்டியது. இந்த கதையை விஜய்யின் தளபதி 69 படத்திற்காக ரெடி செய்துள்ளாராம் வெற்றிமாறன். விஜய் அரசியலுக்கு வரவிருக்கும் நிலையில் கடைசிப் படமாக இது வெளியானால் தரமாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஷூஸ் ஆஃப் தி டெட் நாவலின் உரிமையை வெற்றிமாறன் ஏற்கனவே வாங்கி வைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் வெற்றிமாறன் தளபதி 69 படத்தில் கமிட்டாகிவிட்டால், வாடிவாசல் ட்ராப் ஆகிறதோ எனவும் ரசிகர்கள் சந்தேகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X