Thalapathy 69: தளபதி 69-க்கு விஜய் கேட்ட சம்பளம் இத்தனை கோடியா..? தயாரிப்பாளர் சொன்ன பதில்!
சென்னை: கோட் படத்தில் நடித்து வரும் விஜய் விரைவில் சினிமாவில் களமிறங்கவுள்ளார். கடைசியாக இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளதாக விஜய்யே அறிவித்துவிட்டார். இதனால் விஜய்யின் கடைசிப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், தளபதி 69 படத்துக்காக விஜய் கேட்ட சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 69 படத்துக்கு விஜய் கேட்ட சம்பளம்: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்கவுள்ளதாக விஜய் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய், 2026 தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இதனால் கோட் தவிர்த்து விஜய் இன்னும் ஒரேயொரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளாராம். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரப்படி வெற்றிமாறனின் பெயர் தான் டாப்பில் உள்ளது. இதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தளபதி 69 படத்தை வெற்றிமாறன் இயக்கினால், அது கோட்டா நீலிமா என்பவர் எழுதிய நாவல் 'ஷூஸ் ஆஃப் தி டெட்.' நாவலை தழுவி எடுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளின் பிரச்சினையை பின்னணியாக வைத்து பொலிட்டிக்கல் ஜானர் மூவியாக உருவாகவுள்ளதாம் தளபதி 69. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு நிறுவனமான DVV Entertainment தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தளபதி 69 படத்திற்காக விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாரிசு படத்திற்காக 120 கோடியும், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கு 150 கோடியும் சம்பளமாக வாங்கியுள்ளார் விஜய். இந்த இரண்டு படங்களுக்கும் வாங்கியதை விட அதிகமான சம்பளம் கேட்டுள்ளார் விஜய். இதற்கு தயாரிப்பு நிறுவனம் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி 69 விஜய்யின் கடைசி படம் என்பதால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தாறுமாறாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் கணக்குப் போட்டுள்ளதாம். அதுமட்டும் இல்லாமல் தளபதி 69 பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மாஸ் ஓபனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் ரெடியாகிவிட்டதாம்.


Click it and Unblock the Notifications











