Thalapathy 69 update: விஜய்யுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை யார் தெரியுமா? குஷியில் ஃபேன்ஸ்!
சென்னை: விஜய்யின் 69வது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் விஜய்யின் கடைசி படத்தை தீரன், துணிவு படத்தை இயக்கிய ஹெச் வினோத் இயக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், இப்படத்தின் நடிகை மற்றும் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அதை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். நேற்று முன் தினம் பத்து மற்றும் 12 வகுப்பு மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கினார். மிகவும் கோலாகலமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பல மணிநேரம் கால்கடுக்க நின்று மாணவர்களிடம் பேசினார். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் களமிறங்க இருப்பதால், கையில் இருக்கும் படத்தை முடித்து விட்டு முழுநேர அரசியலில் குதிக்க உள்ளார்.

கோட் படத்தில்: தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளனர். மேலும், பிரசாந்த், பிரபுதேவா, மோகன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் 5ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி69 படத்தில் நடிக்கும் விஜய் பின் முழு நேர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார்.
தளபதி 69: இதனால் விஜய்யின் 69ஆவது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் விஜய்யின் கடைசி படத்தை தீரன், துணிவு படத்தை இயக்கிய இயக்குனர் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் கதை அரசியலை மையப்படுத்திய கதையாக இருக்கும் என்று தகவல் வெளியாகி வரும் நிலையில், இப்படத்தில் நடிகை சமந்தா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை. நடிகை சமந்தா தான் விஜய்க்கு இப்படத்தில் ஜோடி என சொல்லப்படுகிறது. மேலும் KVN தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
4வ முறையாக சமந்தா: நடிகை சமந்தா விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார். தளபதி 69 மூலம் இந்த ஜோடி 4வது முறையாக திரையில் இணையவுள்ளதாக பேசப்படுகிறது. இணையத்தில் வெளியாகி உள்ள இந்த தகவலில் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











