Thalapathy 69: விஜய் - H வினோத் கூட்டணியில் தளபதி 69 கன்ஃபார்ம்... க்ரீன் சிக்னல் கொடுத்த ராஜ்கமல்!
சென்னை: அரசியலில் களமிறங்கவுள்ள விஜய் சினிமாவில் இருந்து விலகவும் முடிவு செய்துள்ளார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிக்க உள்ளார். அதன்படி விஜய்யின் கடைசிப் படமாக தளபதி 69 உருவாகவுள்ளது. இந்தப் படத்தை H வினோத் இயக்கவுள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளதாம்.
விஜய் - H வினோத் கூட்டணி கன்ஃபார்ம்
விஜய்யின் 68வது படமாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் உருவாகி வருகிறது. இதனையடுத்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே விஜய் நடிக்கவுள்ளார். விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளதால் இனி சினிமாவில் நடிக்கவில்லை என விஜய் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

இதனால் விஜய்யின் அரசியல் பயணம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் உட்பட பலரும் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல் விஜய்யின் கடைசி படம் குறித்த எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. விஜய்யின் கடைசிப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அதில் சில மாற்றங்கள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி விஜய்யின் 69வது படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் தளபதி 69 படத்தை விஜய்யின் அரசியல் விருந்தாக ரசிகர்களுக்கு கொடுக்க ஹெச் வினோத் முடிவு செய்துள்ளாராம்.
இந்த கதையை விஜய் பிகில் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே ஹெச் வினோத் கூறியுள்ளார். இப்போது அதே கதையை இன்னும் பட்டி டிங்கரிங் பார்த்து விஜய்க்காக தரமாக ரெடி செய்துள்ளாராம் ஹெச் வினோத். இதற்கு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமும் ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. அதாவது கமலின் 233வது படத்தை இயக்கவிருந்தார் ஹெச் வினோத். ஆனால், அது இன்னும் தொடங்காததால் விஜய்யின் தளபதி 69 படத்தை இயக்கவுள்ளாராம் ஹெச் வினோத்.
அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் தளபதி 69 படத்துக்கு Hungry Cheetah என்ற டைட்டிலை படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் தளபதி 69 படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











